புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2021)

என் பெலனாகிய கர்த்தாவே

சங்கீதம் 18:1

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.


ஒரு குறிப்பிடப்பட்ட ராஜ்யத்தின் படைபலம் அதிகமாயிருந்ததால் அந்த ராஜ்யத்தின் குடிகள் அநேக வருடங்களாக சுதந்திரமாக, அமைத லுள்ள ஜீவனம் பண்ணினார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு பின், தூர தேசத்திலிருந்து வந்த இராணுமானது மேற்குறிப்பிட்ட தேசத்தை சுற்றி லும் முற்றுகை போட்டது. தூரத்திலிருந்து வந்த அந்த தேசத்தார் தங்களை விட மிகவும் கெடிதும், வேகமும், பயங்கரமுமானவர்கள்; என்று அறிந்து கொண்ட அந்த ராஜ் யத்தின் ராஜாவும், மந்திரிகளும், குடி களும் கலக்கமடைந்தார்கள். ஏனெ னில் அந்த குறிப்பிடப்பட்ட ராஜ்ய த்தின் பெலன் அவர்கள் படைப்பலமாக இருந்தது. அவர்கள் அதிலே தங்கள் நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆதலால் தங்கள் படைபல த்தைவிட அதிக பெலமுள்ளவர்களாகிய அவர்களை எதிர்க்கும் போது அவர்கள் மனம் கரைந்து போயிற்று. இன்றைய உலகிலே மனிதர்களின் பெலன் எங்கே இருக்கின்றது? எதிலே தங்கள் நம்பிக்கையை வைத்தி க்கின்றார்கள்? உடற் பெலன், கல்வியறிவு, பொருளாதார செழிப்பு, செல் வாக்குகள், குடும்ப சமுதாய அந்தஸ்து, ஜனங்களின் திரட்சி, ஆயத பெலன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இவைகளிலே ராஜ்யங்களும், ஜாதிகளும் பெருமைபாராட்டுகின்றார்கள். அவைகள் அவர்களைவிட்டு நீங்கிப் போகும் நாளிலே அவர்கள் நம்பிக்கையும் அவர்களைவிட்டு நீங்கி போய்விடுகின்றது. தாவீது என்னும் மனிதன், தன் தகப்பனின் கொஞ்ச ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தன் இள மைக் காலத்திலும், ராஜாவாக அரண்மனையிலே இருந்த நாட்களிலும், எதிரிகளால் துரத்தப்பட்டு வனாந்திரங்களிலே அலைந்து திரிந்த நாட் களிலும் தன்னுடைய பெலன் எங்கே இருக்கின்றதென்பதை நன்கு அறி ந்திருந்தான். ஆதலால், சிலர் இரதங்க ளைக்குறித்தும், சிலர் குதிரை களைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவ னாகிய கர்த்தருடைய நாம த்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம் என்று அறிக்கையிட்டார். அந்த நாமத்தினாலே நாம் இந்த உலகத்திலே பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாம் நம் வாழ்வில் நிறைவேற்றி இந்த உலகத்தை ஜெயம் கொள்ளும்படிக்கு அவர் நம்மை பலத்தால் இடைகட்டி, நம் வழியைச் செவ்வைப்படுத்துகிறார். பிரியமானவர்களே, மாறாத தேவனிலே பெலன் கொள்கின்ற மனிதர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் கர்த்தரோடு பரம தேசத்திலே என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

ஜெபம்:

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்திலே நான் உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்றி முடிக்கும்படி நீரே என்னு டைய பெலனாக இருக்கின்றீர். அதற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரே 32:17