புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2021)

தேவ சமாதானம் ஆளக்கடவது

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது


அவசரமாக சில நாட்களுக்கு வெளியூருக்கு சென்றிருந்த குடும்பத்தினர், வீடு திரும்பிய போது, அவர்கள் வீடெங்கும் துர்நாற்றம் வீசியது. ஊரிலே சில நாட்களாக மின்சாரமில்லாதிருந்ததால், குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவுப் பண்டங்கள் யாவும் பழுதடைந்து போயி ற்று. அந்த வீட்டில் வீசும் துர்நாற்றத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றால், முதலாவதாக துர்நாற்றத்தை உண்டாக்கும் அந்த உணவுப் பண்டங் கள் யாவும் குளிர்சாதனப்பெட்டிக்குள் ளிருந்து அகற்றப்பட வேண்டும். நம் இருதயத்திலே, ஆண்டவராகிய இயேசு கொடுத்த பரலோக சமாதானம் ஆளுகை செய்ய வேண்டுமாயின், முத லாவதாக, தற்போது இருதயத்தை ஆளுகை செய்யும் இந்த உலகத்தின் காரியங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும். கடந்த இரண்டு தினங்களாக மனிதர்களுடைய வாழ்க்கையை ஆளுகை செய்யும் இந்த உலக காரியங்கள் சிலவற்றைக் குறித்து தியானித்தோம். இன்னு மாய் மனிதர்களில் சிலர் தங்களை ஞானிகளென்றும், மற்றவர்களை பேதை கள் என்றும் வகையறுத்து பிரித்து வைக்கின்றார்கள். வேறு சிலர், தாங் கள் மேன்மக்கள் என்று கருதி, மற்றவர்களை கீழ்மக்கள் என்று ஒடுக்கி யாழுகின்றார்கள். இன்னும் சிலரின் இருதயத்தை வருங்கால பயங்கள் ஆட்கொண்டு விடுகின்றது. சில மனிதர்களின் இருதயம் மற்ற மனிதர்க ளின் வாழ்விலுள்ள குறைவுகளினால் நிறைந்திருக்கின்றது. இப்படிப்ப ட்டவர்களின் வாழ்க்கையை உலகத்தின் பெருமையும், அகங்காரமும் ஆளுகை செய்கின்றது. இவ்வண்ணமாக மனிதர்களுடைய இருதயம் இந்த உலகத்தினால் மேன்மை என்று பெயர் பெற்றிருக்கும் இருளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்கின்றது. இன்று உங்கள் இருதயத்தில் தேவ சமாதானம் ஆளுகை செய்கின்றதா? அல்லது வாழ்விலே நிம்மதியற்ற வர்களாக இருக்கின்றீர்களா? தேவசமாதானமானது உங்கள் இருதயங்க ளை ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட் டீர்கள்; என்பதை பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு விட்டுசென்ற அவருடைய சமாதானம் உங்கள் உள்ளத்தில் இல்லை என்றால், இன்று உங்கள் இருதயத்தை ஆளுகை செய்வது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்? உங்கள் இருதயத்தில் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் இருக்குமாயின் அவற்றை அகற்றிவிட இன்று தீர்மானம் செய்யுங்கள். தேவ ஆவியானவர்தாமே அவற்றை மேற்கொள்ள உங்களுக்கு துணை செய்வார்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, நீர் தந்திருக்கும் சமாதானம் என் உள்ளத்தை ஆண்டு கொள்ளும்படிக்கு, வாழ்வின் சமாதானத்தை கெடுக் கும் துர்க்கிரியைகளை என்னைவிட்டு அகற்றிவிட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1