புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2021)

என்னை ஆளுவது எது?

2 பேதுரு 2:19

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.


பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்களை பிரித்தெடுப்பதில் இரண்டு சகோதரருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவிட்டது. அந்த கரு த்து முரண்பாடுகளினால் அவர்கள் குடும்பங்களுக்கிடையிலே பிரி வினை உண்டாயிற்று. அதனால் சொத்துக்களை சட்டப்படி பிரித்தெடு க்கும்படிக்கு இரண்டு சகோதரருக்கிடையிலும் நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டது. பல மாதங்களு க்கு பின் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு அவர்கள் மனதிற்கு ஏற் புடையதாக இருக்காவிடினும், சட்ட ப்படி அவர்கள் சொத்துக்கள் பிரிக்க ப்பட்டது ஆனால் அவர்களுக்கிடை யிலே பகை உண்டாயிற்று. இந்த இரண்டு சகோதர்களையும் எது ஆளுகை செய்கின்றது? இருவர் மத்தியிலும் பிரிவினைக்கு காரணம் என்ன? தங்கள் உறவைவிட எதை அவர்கள் மேன்மைப் படுத்தினார்கள். இந்த உலகப் பொருளைக் குறித்த ஆசை அவர்களை ஆளுகை செய்தது. அழிந்து போகும் இந்த உலக ஐசுவரியத்தின் மயக்கம் அவர்கள் மனதிலே, பகை, வன்மம், கசப்பு, பிரிவினை போன்றவற்றை உண்டாக்கிற்று. என்னுடைய கருத்து சரியானது, மற்றவனுடைய கருத்து பிழையானது என்று கூறி ஒரு மனிதன் தன் மனதிலே மாம்சத்தின் கிரிகைகளுக்கு இடங் கொடுப்பது தேவ நீதியாகுமோ? இல்லை. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்த த்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். இன்று கணவன் மனைவிக்கிடையிலான உறவு அற்றுப் போகின்றது. நண்பர் கள் பிரிந்து போகின்றார்கள். உறவினர் மத்தியிலே பிரிவினை ஏற்படு கின்றது. சகோதரருக்கிடையிலே பகை உண்டாகின்றது. விசுவாசிகளுக் கிடையிலே நல்லுறவு உடைந்து போகின்றது. ஏன்? இவை யாவும் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெரு மையினால் உண்டாகும் பின்விளைவுகளாகவே இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும், நம்முடைய வாழ்க்கையிலே சவால்களை எதிர் நோக்கும் போது, “நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இந்த உலகத்தை ஜெயிக்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது இந்த உலகம் நம்மை ஆளுகை செய்ய இடங் கொடுக்கின்றோமா” என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த உலக ஆசைகள் நம் இருதயத்தை கொள்ளை கொண்டால் நாம் இந்த உலகத்திலுண்டானவைகளால் ஆளுகை செய்ய ப்படுவோம். நாம் கிறிஸ்துவின் சிந்தையுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இந்த உலகத்தை ஜெயிக்கின்றவர்களாக விளங்குவோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, அழிந்து போகும் இந்த உலகத்தினாலுண்டானவைகளில் ஆசை வைத்து நான் உம்மைவிட்டு தூரமாக போய்விடாதபடிக்கு என்னை நீர் காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:18-21