புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2021)

தேவன் தந்த சுயாதீனம்

கலாத்தியர் 5:13

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள்


இந்தப் பூமிiயும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், அவைகளை ஆளுகை செய்யும்படிக்கு மனிதனை ஆசீர்வதி த்தார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிரு~;டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிரு~;டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத் திரத்தின் மச்சங்களையும் ஆகாய த்துப் பறவைகளையும், நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். தேவ சாயலாக சிரு~;டிக்கபட்ட மனி தனாவன், வானத்தின் சேனைகள், ஆகயத்துப் பறவைகள், நடமாடு கின்ற மிருகங்கள், பூமியிலே ஊரும் பிராணிகளின் சாயலிலே தனக்கு தேவர்களை உண்டாக்கிக் கொள்கின்றான். தான் ஆளுகை செய்ய வேண்டியவைகளை, தன்னை ஆளுகை செய்யும்படி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவைகளை தன் வாழ்க்கையிலே தேவனுக்கு சமமாக உயர்த்திவிட்டான். இதனாலே, மெய்யான தேவன் யார் என்பதை தான் மறந்து போனது மட்டுமல்லாமல், தனக்கு பின்வரும் சந்ததியும் இருளிலே வாழும்படிக்கு அவர்கள் மனக் கண்களையும் குருடாக்கி விடுகின்றான். தேவன் கொடுத்த சுயாதீனத்தை, தன் துர்குணத்தினாலே, தன்னைத்தான் அடிமைத்தன நுகத்திற்கு உட்படுத்தி விடுகின்றான். யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும் படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள் ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது. ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக் கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. பிரியமானவர்களே, நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;. அவர் நம்மை அடிமை த்தனத்திற்கல்ல, சுயாதீனத்திற்கென்றே அழைத்தார். தேவ சாயலிலே சிரு~;டிக்கப்பட்ட நாம், படைக்கப்பட்டவைகளுக்கு அடிமைப்படாமல், மெய்யான பரலோக தேவனை நோக்கிப் பார்ப்போம்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, நீர் தந்த விடுதலையை மறந்து, உலகத்தின் படைப்புக்களால் நான் ஆளப்படாதபடிக்கு, எப்போதும் பரலோகத்திலுள்ள உம்மை சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதி 1:28