புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2021)

வழிகளைச் சோதித்து பாருங்கள்

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய் ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.


ஒரு மனிதன் தேநீர் பருகும்படிக்கு, தண்ணீரை வாயு அடுப்பிலே கொதிக்க வைத்து கொண்டிருக்கும் போது, அருகிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் மோட்டார் வண்டியொன்று வந்து நிற்பதைக் கண்டு, அதன் காரணத்தை அறிய ஆவலுள்ளவனாக, வீட்டிற்கு வெளியே சென்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி அயலவனின் வீட்டை பார்;த்துக் கொண்டிருந்த போது, தான் கொதிக்க வைத்த தண்ணீரை குறித்து மறந்து போய்விட்டான். பல நிமிடங்க ளுக்கு பின்னர், தன்னுடைய வீட்டில் தீ பற்றியெரிகின்றது என்பதை கண்டு பதற்றமடைந்தான். சற்று நேரத்திற்கு பின், தீ பரவி எரிந்ததால், அவன் வீட் டிற்கு முன்னர், தீயணைக்கும்படை யினரின் வாகனங்களும், முதலுதவிப் குழுவினரின் வாகனங்களும், சில பொலிஸ் வண்டிகளும் அவன் வீட் டிற்கு முன்பாக வந்து சேர்ந்தது. அயல்வீட்டிலே என்ன நடக்கின்றது என்று அறியும் ஆவலினாலே, தன் வீட்டின் விவகாரங்களை மறந்து போய்விட்டேனே என்று மிகவும் மனவருதப்பட்டான். பிரியமான சகோ தர சகோதரிகளே, தேவனுடைய வார்த்தையை நாம் வாசித்து தியானி க்கும் போது, முதலாவதாக, நம்முடைய வாழ்வைக் குறித்தே கவனமு ள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த வார்த்தை என் அயலவனு க்கு, அந்த வார்த்தை என் சகோதரனுக்கு, இது என் உறவினருக்கு என்று மற்றவர்களுடைய வாழ்வைக் குறித்தே நாம் சிந்தையுள்ளவர்க ளாக இருந்தால், நாமும், தண்ணீர் கொதிக்க வைத்த அந்த மனிதனு டைய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். மற்றவர்களுக்கு நாம் உதவி செய்வது நல்லது. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத் திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது மிகவும் நல்லது ஆனால் உலக த்தால் கறைபடாதபடிக்கு நாம் நம்மை காத்துக்கொள்ளுவதின் அவசிய த்தை நாம் மறந்து விடக்கூடாது. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிற தென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோ தரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போ டட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணி லிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு. பின்பு உன் சகோதரன் கண்ணி லிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே முதலாவதாக நாம் நம்முடைய வாழ்வைக் குறித்தே எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நான் என் வாழ்வை எப்போதும் ஆராய்ந்து பார்த்து எச்சரிக்கையுள்ளவனா(ளா)க இருக்க கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-5