புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2021)

கணக்கு கொடுக்கும் நாள்

மத்தேயு 25:19

வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர் களிடத்தில் கணக்குக்கேட்டான்.


பட்டணத்திலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், தொலைவிலுள்ள ஒரு சிறிய ஊருக்கு மோட்டார் வண்டியிலே சென்றுகொண்டிந்தான். பட்ட ணத்து நெடுஞ்சாலைகளின், வீதிகள் யாவும் கரடுமுரடின்றி சீராக அமை க்கப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் ஓடுவதற்குரிய பாதையும் அமை க்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் பட்டணத்ததை விட்டு அந்த சிறிய ஊருக்கு சென்றபோது, அங்கே செல் லும் பாதை பள்ளமும் திட்டியும், கரடு முரடுமுமாக இருந்தது. அத னால் அவன் மோட்டார் சைக்கிளை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டிச் சென்றான். இவ்வண்ணமாகவே மனி தர்களுடைய வாழ்க்கையும் வேறுபட் டிருக்கின்றது. சில குடும்பங்கள் செழி ப்புடன் வாழ்ந்து வருகின்றது. ஆனால் சிலருடைய வாழ்க்கை நாளாந்தம் பல சவால்கள் மத்தியிலே ஓடிக்கொண்டிருக்கின்றது. சிலருடைய குடும்பத்திலே, அங்கத்தினர்கள் யாவரும் இரட்சிப்படைந்திருப்பதால், அவர்கள் குடும்பமாக, ஐக்கியத்துடன் தேவனை சேவிக்கின்றார்கள். ஆனால் வேறு சிலரின் குடுத்பத்திலே, ஒருவர் மாத்திரம் அல்லது ஒரு சிலர் மாத்திரம் ஆண்டவர் இயேசுவை அறிந்திருப்பதால் அங்கே பல சாவல்களை அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். சில நாடுகளிலே மதச் சுதந்திரம் இருப்பதினாலே, தடையேதுமின்றி ஆண்டவர் இயேசுவை சேவிக்கின்றார்கள். ஆனால் சில நாடுகளிலே கிறிஸ்துவை அறிந்தவ ர்கள் பல துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று செய்தி கள் வாயிலாக அறிகின்றோம். மதச் தடைச்சட்டம் நாட்டின் துன்பங் கள் மத்தியிலே வாழும் கிறிஸ்தவர்களைவிட, மதச் சுதந்திரமுள்ள நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் மேலானவர்களா? குடும்பத்தில் ஒரு சிலரே கிறிஸ்துவை சேவிப்பவர்களாக இருக்கும் குடும்பத்தைவிட, முற்றிலும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்திலுள்ளவர்கள் தங்களை மேன் மைபாராட்ட முடியுமா? ஐந்து தாலந்து பெற்றவன் தான் பெற்றுக் கொண்ட ஐந்து தாலாந்துக்கும், இரண்டு தாலந்து பெற்றவன் தான் பெற்றுக் கொண்ட இரண்டு தாலாந்துக்கும், ஒரு தாலாந்து பெற்றவன் தான் பெற்றுக் கொண்ட ஒரு தாலாந்துக்குமே கணக்கு கொடுக்க வேண் டும். பிரிய மானவர்களே, நமது எஜமானனாகிய ஆண்டவர் இயேசு வரும் நாட்கள் சமீபித்துக் கொண்டிருக்கின்றது. எனவே பெற்றுக் கொண்டவைகளுக்கு கணக்கொப்புவிக்கும்படி ஆயத்தப்படுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, சந்திப்பின் நாளிலே, உமக்கு முன்பாக நான் உண்மையும் உத்தமமுமாக வாழவும், நீர் தந்தவைகளை நான் பெருக்கிக் கொள்ளும்படிக்கும் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7-8

Category Tags: