புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 20, 2021)

நம் வாழ்வின் மேன்மை

எரேமியா 9:24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியை யும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக் கடவன்


என்னைப் பாருங்கள், பல ஆண்டு காலமாக, நான் தவறாமல் ஆல யத்திற்குச் சென்று வருகின்றேன், காலையும் மாலையும் வேதத்ததை தியானிக்கின்றேன், ஊக்கமாக ஜெபித்து வருகின்றேன். என்னுடைய உழைப்பிலே தசமபாகம் காணிக்கையை மனதார செலுத்தி வருகின் றேன். திக்கற்றவர்கள் விதவைக ளுக்கு என்னால் கூடுமானவரை உதவி செய்து வருகின்றேன். என் பிள் ளைகள் ஒழுக்கத்தோடு இருக்கின்றா ர்கள். என் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது என்று ஒரு மனி தனாவன் தன் கிறிஸ்தவ வாழ்க் கையை குறித்து கூறிக் கொண்டான். இப்படியாக மனிதர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம் அல்லவா? சில மனிதர்களுடைய வாழ்விலே அது உண்மையாக இருக்கலாம். சில காலகட்டத்திலே நம்முடைய வாழ் வும் அப்படியாக அமையலாம். வாழ் க்கையானது இவ்விதமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலே, மனிதர்களின் சிந்தையிலே அவர்களை அறியாமல் பெருமை குடி கொண்டு விடுகின்றது. அதுமட்டுமல்லாமல், வாழ்க்கையிலே சவால் களை எதிர்நோக்கும் மற்ற மனிதர்களைப் பார்க்கும் போது, அவர்கள் ஏதோ அநியாயம் செய்துவிட்டார்கள் என்ற எண்ணமும் மனதிலே தோன்றிவிடுகின்றது. இந்த ஆபத்தான பெருமையின் வலையத்திற்குள் நாம் நம்மை சிக்கவைத்து விடாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். எப்படியாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்? ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;. மேன்மைபா ராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திரு க்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல் லுகிறார்;. எனவே, நம் வாழ்வின் உயர்வான நேரத்திலும், தாழ்வின் பாதையிலும் நம் வாழ்வில், கர்த்தரே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் நடப்பிக்கின்றார் என்பதை அறிந்துணர்ந்து என்றும் நன்றி யுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கின்ற தேவனே, நீர் என்னுடைய தேவனாக இருப்பதே எந்தன் வாழ்வின் மேன்மை என்பதை ஒருபோதும் மறந்து போய்விடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதய த்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:9