புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2021)

இடறி விழுவதில்லை

2 பேதுரு 1:11

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.


சீமோன் பேதுரு என்னும் மனிதர், பரம அழைப்பை பெற்றவராவர். தேவனுடைய ஊழியத்தை செய்யும்படிக்கு ஆண்டவர் இயேசுவாலே தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு அருமையான பாத்திரமாக அவர் இருந்தார். இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்ற வெளிப்பாட்டை பெற் றிருந்த போதும், இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தையும், பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர் -மானம் நிறைவேறும்படிக்கு, இயேசு-வானர்தாமே, மனித குலத்தின் பாவ ங்களை தன்மேல் சுமந்து, அந்த பாவங்களுக்குரிய பரிகாரத்தை செலு த்தும்படிக்கு, அவர் பலபாடுகள்பட்டு, கொல்லப்பட்டு, மரணத்தை ஜெயி த்து மூன்று நாளைக்குப்பின்பு உயிர் த்தெழுந்திருக்கவேண்டியதென்பதை யும் அவர் உணராதிருந்தார். நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிரு ந்தாலும் உம்மை மறுதலிக்கமாட் டேன் என்ற உறுதி கூறியிருந்த பேது ருவானவர், ஆண்டவராகிய இயேசு, காட்டிக் கொடுக்கப்பட்டபோது, அங்கிருந்தவர்கள், நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று பேதுருவுக்கு கூறியபோது, இயேசுவை எனக்குத் தெரியாது, அவரை நான் அறியேன் என்று மூன்றுமுறை மறுதலித்து, சபித்துவிட்டார். அப்பொழுது பேதுரு தன்னுடைய பெலவீனத்தை உணர்ந்து, மனங்கசந்து அழுதார். பின்னர், பல பாடுகள் உபத்திரவங்கள் மத்தியிலும், தேவ பெலத்தினாலே வெற்றி வாழ்க்கை வாழ்ந்த அவருடைய சாட்சி வழியாக நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 1. நாம் உன்ன தமான அழைப்பை பெற்றிருக்கின்றோம். இந்த அழைப்பு தேவனுடைய ஈவு. 2. அந்த அழைப்பிலே பிதாவாகிய தேவனுடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டும். 3. தேவ சித்தத்தை நிறைவேற்றும் பாதையிலே, பாடுகளும் உபத்திரவங்களும் உண்டு. அதை நாம் நம் சுயபெலத்தினாலோ, மனித அறிவினாலோ மேற்கொள்ள முயன்றால் இடறிவிழுந்து விடுவோம். 5. அழைத்த தேவன், நம்மை நடத்தி செல்லும்படிக்கு, தூய ஆவியானவரை நமக்கு கொடுத்திருக்கின்றார். அந்த தேவ பெலத்தினாலே நாம் இந்த உலகத்திலுள்ள உபத்திரவ ங்களை ஜெயிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். அழைத்த தேவன் நம்மை முடிவு பரியந்தம் நடத்தி செல்ல இடங்கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கென்று என்னை தெரிந்து கொண்ட தேவனே, என் சுயபெலத்திலே நம்பி நான் வாழாமல், தேவ பெலத்திலே நிலை கொண்டு, வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5