புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2021)

உங்கள் நிலையை மறந்துவிடாதிருங்கள்

தானியேல் 4:34

என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக் கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்.


பாபிலோன் ராஜ்யத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் பராக்கிரமமுள்ள ராஜா இருந்தான். ஆனால், இந்தப் பூமியிலேயுள்ள ராஜ்யங்களும், ஆளு கைகளும் ஒன்றான மெய்த் தேவனாகிய கர்த்தரின் ஆளுகைக்கு உட்ப ட்டிருக்கின்றது என்று அறியாமல், “இது என் வல்லமையின் பராக் கிர மத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கென்று அரம னையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.” தான் மனிதன் என்பதையும், தன் னிலிருக்கும் பாவங்களையும் அக் கிரமங்களையும் அவன் உணராமல், பெருமையானவைகளை சிந்தித்து, தன்னைத் தானே உயர்த்தினான். அந்த வேளையிலே, வானத்திலிரு ந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவா கிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. உன்னத மான தேவனே மனு~ருடைய ராஜ் யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்து கொள்ளும் நாள் வரைக்கும், மனு~ரினின்று தள்ளப்படுவாய்; வெளி யின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய் வாய் என்று விளம்பிற்று. இப்படியாக பராக்கிரமமும் வல்லமையுமுள்ள ராஜா மெய்யான தேவன் யார் என்பதை உணரும்வரைக்கும் தள்ளபட்டி ருந்தான். அவன் உணர்வடைந்து, தன் நிலையை குறித்து சிந்திக்கும் படிக்கு தேவனாகிய கர்த்தர் அவனைத் தனிமைப்படுத்தினார். அந்த நாட்கள் சென்றபின்பு, அவனுடைய புத்தி அவனுக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது அவன், உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றெ ன்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தி, அவரு டைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும் என்பதை உணர்ந்து அறிக்கை யிட்டான். பிரியமானவர்களே, அதுபோலவே நாம் நம்முடைய நிலை யை உணராமல், இந்த உலகத்தின் பெருமைகள் நம் வாழ்விலே தலை தூக்கும் போது, தேவ ஆலோசனைகளைக் கூட அற்பமாக எண்ணிவிடு கின்றோம். ஆனால் தேவன் நம்மை நேசிப்பதால், அவர் நாம் நம்மு டைய நிலைமையை உணர்ந்து கொள்ளும்படிக்கான சூழ்நிலையை நம் வாழ்விலே ஏற்படுத்தி, தம்முடன் நம்மை சேர்த்துக் கொள்கின்றார்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, நான் உம்மை மறந்து உணர்வற்றவனா(ளா)கி, இந்த உலக மேன்மைக்குள் சிக்கி, அறிவிழந்து போகாதபடிக்கு, எப்போதும் உம் வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13