புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2021)

வாழ்க்கையை தினமும் ஆராய்ந்து பாருங்கள்

சங்கீதம் 119:59

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட் சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.


கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு~ன் பாக்கியவான். ஏனெனில், கர்த் தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயி ருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்கு கிறதுமாயிருக்கிறது. கர்த்தர் விளம்பிய வசனம் நம் கால்களுக்குத் தீபமும், நம்; பாதைக்கு வெளிச்சமு மாயிருக்கிறது. அவ்வழியாய் நடந்து செல்கின்றவர்கள் இடறலடைவதில்லை. நம்முன்னே வாழ்ந்து வெற்றி சிறந்த திரளான வேதசாட்சிகள் யாவரும் கர்த் தருடைய வசனத்திலே ஊன்றக் கட்ட ப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள். அவர் கள் திருவசனத்தை கேட்கின்றவர்க ளாக மட்டுமல்லாமல், அந்த வார்த்தை யின் வெளிச்சத்தில் தங்களுடைய வாழ்வை தினமும் ஆராய்ந்து பார்த்து, நாளுக்கு நாள், தங்கள் குறைகளை நிறைவாக மாற்றினார்கள். நம்முடைய வாழ்விலே கர்த்தருடைய வசனத்தை தினமும் தியானிக்க வேண்டும். அப்படி நாம் தியானம் செய்யாமல், ஏனோ தானோ என்று வாழ்வோமென்றால், கர்த்தராகிய இயேசு நம்மில் அன்புகூருகின்ற படியால், நாம் உணர்வடைந்து, வேத வசனங்களை தியானிக்கும் இடத் திற்கு நம்மை கொண்டு வருவார். எடுத்துக் காட்டாக, பாடசாலையிலே ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனொருவனுக்கு ஆசிரியர் பலமுறை அறிவுரை கூறியும் அவன் அதை தன் உள்ளத்தில் எடுத்துக் கொள் ளாமல், குறும்புச் செயல்களை செய்து வந்தான். ஒரு நாள் அந்த ஆசி ரியர், குறிப்பிட்ட மாணவனை அழைத்து, வகுப்பறையில் ஒரு மூளை யிலே தனியாக நிற்கும்படி செய்து, நீ செய்து வந்ததைபற்றி சிந்தித்துப் பார். சிந்தித்தபின் அதைப்பற்றி நீ ஏதாவது பேச விரும்பினால் என்னிடம் வா என்று தண்டனையை வழங்கினார். மாணவர்களுக்கு முன்பாக அப்படி தனித்திருப்பது அவனுக்கு வெட்கமாக இருந்தாலும், அவன் தன் நடக்கைகளைப்பற்றி சற்று சிந்திக்க ஆரம்பித்தான். நாம் அப்படியாக நம்முடைய வாழ்க்கையில் தண்டனையை பெற்றபின்பு சிந்திக்க ஆரம்பிக்காமல், ஒவ்வொரு நாளும் காலையிலும், படுக்கை க்கு செல்ல முன்பும், வேத வார்த்தைகளின் வெளிச்சத்திலே நம்மு டைய நாளாந்த நடக்கைகளை தியானித்து, நம் வாழ்விலிருக்கும் தேவனுக்கு பிரியமற்ற காரியங்களை விட்டு விலகி, நிறைவை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, வேதனை உண்டாக் கும் வழிகள் என் வாழ்வில் இருந்தால், நான் உணர்வடைந்து, அவைகளைவிட்டுவிட எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:24