புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2021)

நம்பிக்கையற்ற வேளைகளில்...

ரோமர் 8:37

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.


ரோமர் ஆட்சி செய்த நாட்களிலே, நித்திய வாழ்வு கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததினிமித்தம் பவுல் என்னும் தேவ ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் கைதியாக கடல் மார்க்கமாக கப் பலில் ரோமாபுரிக்கு கொண்டு செல்லபட்ட போது, யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காறறில் கப்பல் அகப்ப ட்டுக்கொண்டதால், மாலுமிகள் வெகு வருத்தத்தோடே கப்பலை ஓட்டினார் கள். பல உபாயங்கள் செய்து, கப்ப லைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோ மென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டு போகப்பட்டார்கள். மேலும் பெருங்கா ற்று மழையில் அவர்கள் மிகவும் அடி பட்டபடியினால், மறுநாளில் சில சரக் குகளைக் கடலில் எறிந்தார்கள். மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாட ங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற் றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போ மென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. அந்தக் கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தார்கள்;. அநேகநாள் அவர்கள் போஜ னம்பண்ணாமல் இருந்தார்கள். அந்த வேளையிலே, தேவ ஊழியராகிய பவுல் அவர்களை நோக்கி: திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங் களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேத மேயல்லாமல் உங்க ளில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட் கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவன் என்னை திடப்படுத்து ம்படி தம்முடைய தூதனை அனுப்பினார். திடமனதாயிருங்கள், என்னி மித்தம் உங்களுக்கும் தேவன் தயவுபண்ணினார் என்று அவர்களுக்கு கூறினார். ஆம் அந்த பயங்கரமான சூழ்நிலையிலும், தேவன் அவரோடி ருந்ததினால், அவர் புயல்காற்றைக்கண்டு பயப்படாமல், அதன் மத்தியி லும் தேவனுடைய ஆளுகையைக் கண்டு கொண்டார். பிரியமானவர் களே, நம்முடைய வாழ்க்கையிலும், கடும் புயலைப் போன்ற சூழ்நிலை கள் வரும்போது, அந்த சூழ்நிலைகளைக் கண்டு பயந்து, நம் வாழ்வு முடிந்தது என்று நம்பிக்கையற்றவர்களாக வாழாமல், கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும், நம்மில் அன்புகூர்ந்து, நம்மோடிருந்து நம்மை வெற்றி சிறக்கப்பண்ணும் கர்த்தராகிய இயே சுவின் மேல் நம்பி க்கையாயிருப்போமாக.

ஜெபம்:

ஜெயங்கொடுக்கும் தேவனே, எந்த சூழ்நிலையும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது என்ற நிச்சயத்தோடு வாழ என்னை திடப்படுத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28