புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2021)

வாழ்வின் குறைவுகள் நிறைவாகும்

நியாயாதிபதிகள் 13:24

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது. கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.


இஸ்ரவேலிலே, தாண் என்னும் வம்சத்தை சேர்ந்த மனோவா என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவன் மனைவி பிள்ளைபேறற்றவளாக இருந் தாள்;. ஒரு நாள் கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசன மாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந் தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய் என்று கூறினார். அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புரு~னிடத்தில் வந்து: தேவனுடைய மனு~ன் ஒரு வர் என்னிடத்தில் வந்தார்; அவரு டைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப் போல மகா பயங்கரமாயி ருந்தது. எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை. அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆத லால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு.அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது அவளுடைய புரு~னாகிய மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனு டைய மனு~ன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப் போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். பிள்ளைபேறற்றிருந்த இந்த தம்பதியினரின், தேவனுடைய வார்த்தையைக் குறித்த விசுவாசத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். பிள்ளையற்றவர்களாக இருந்த அவர்கள் தேவனுடைய வார்த்தையை கேட்டபோது, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கு அடையாளம் எதையும் கேட்கவில்லை. தங்களுடைய குறைவை குறித்து சிந்திக்காமல், தேவனுடைய வார்த்தையிலுள்ள நிறைவிலே நம்பிக்கை வைத்தார்கள். கர்த்தருடைய வார்த்தை நிறை வேறி, தமக்கு பிள்ளை பிறக்கும் போது, அந்த பிள்ளையை எப்படி யாக தாங்கள் வளர்க்க வேண்டும் என்று தேவ வழிடத்துதலை வேண்டி நின்றார்கள். அவர்களைப் போல, நாமும், நம்முடைய குறைவுகளை மேன் மைபடுத்தாமல் தேவனுடைய வார்த்தையைக் குறித்து, திடநம்பிக்கை நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். அவர் சொன்னதை செய்யும் தேவன். நிச்சயமாக தம் வார்த்தையை நிறைவேற்றியே முடிப்பார்.

ஜெபம்:

சொன்னதை நிறைவேற்றும் தேவனே, என் வாழ்வின் குறைவுகளை கண்டு அவைகளினாலே என் மனதை நிரப்பிக் கொள்ளாமல், உம்முடைய நிறைவான வார்த்தையில் நம்பிக்கையாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:11