புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2021)

உறுதியாய் நிலைத்திருங்கள்

மத்தேயு 7:11

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவை களைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?


வீட்டிற்குள் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுபிள்ளையானது, சமையலறைக்கு சென்று ஒரு சிறு கத்தியை தூக்கிவிட்டது. அதைக் கண்ட தாயார் தீவிரமாக ஓடிச் சென்று, அந்தக் கத்தியை தன் பிள்ளை யிடமிருந்து கவனமாக எடுத்துக் கொண்டாள். உடனே அந்தப் பிள்ளை தனக்கு அந்த கத்தி வேண்டும் என்று சத்தமிட்டு அழுது கொண்டி ருந்தது. தன் தாயானவள் தன் விருப் பத்திற்கு முரணாக செயற் படுகின் றாள் என்ற சிந்தையே அந்த குழந்தை யின் மனதிலே முழுமையாக இருந் தது. அது போலவே, வளர்ந்த பிள் ளைகளும் தங்கள் விருப்பங்களை தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின் றார்கள். ஆனால் உண்மையாக தங் கள் பிள்ளைகளை நேசிக்கின்ற பெற் றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எவை களை எப்போது கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றார்கள். ஆனால் சில வேளைகளிலே தங்களுக்கு பிடித்தவைகளை பெற்றோர் வாங்கிக் கொடுக்காத போது, பெற்றோர் தங்களை நேசிப்பதில்லை என்று பிள்ளைகள் கூறிக் கொள்வார்கள். அப்படியாக பிள்ளைகள் கூறும்போது, அவர்கள் பெற்றோரின் அன்பை உலக பொருட்களினாலே மட்டும் அளவிடுகின்றார்கள். நம்முடைய பரம பிதாவைப் போல நம்மை நேசிப்பவர்கள் இந்த உலகிலே எவ ருமேயில்லை. அவர் நம்மை நேசிப்பதால், நாம் கேட்பதையெல்லாம் நமக்கு கொடுக்கின்றார் என்பது பொருளல்ல. யாவற்றையும் அறிந்த சர்வ வல்லமையுள்ள பிதா, காலங்களையும் நேரங்களையும் நம்மு டைய தேவைகள் என்ன என்பதையும் அவர் அறிந்திருக்கின்றார். சில வேளை களிலே நாம் அந்தக் குழந்தையைப் போல, “ஏன் என் தாயார் என் கையிலிருந்த கத்தியை பறித்துக் கொண்டார்” என்பது போல நாமும் நொந்து கொள்கின்றோம். அந்தக் கத்தியால் தனக்கு ஏற்பட க்கூடிய ஆபத்தை அறியாத அந்த பிள்ளைகளைப் போல நாம் இருக்க க்கூடாது. நம்முடைய பரமபிதா, தாய்போல தேற்றி, தந்தை தன் பிள் ளைகளை தோளின்மேல் சுமப்பது போல சுமக்கின்றார். சில சமயங்க ளிலே, நாம் மதியற்ற பிள்ளைகளைப் போல நடக்கும் போது, நாம் உண ர்வடையும்படி தண்டித்து கண்டித்து சீர்திருத்தி நேரிய பாதையிலே நட த்திச் செல்கின்றார். நம்முடைய பரம தந்தை நம்மை அன்பு செய்கி ன்றார் என்பதை நீங்கள் விசுவாசித்தால், அவர் நன்மையே அன்றி தீமை செய்யமாட்டார் என்பதை உணர்ந்தவர்களாக வாழ்வீர்கள்.

ஜெபம்:

நன்மையின் ஊற்றாகிய பரம தந்தையே, என் தேவை என்னவென்று நீர் அறிவீர். வருங்காலங்களைக் குறித்து நீர் அறிவீர். எனவே நான் உம்மிலே உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:28