புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2021)

நீங்கள் பயப்படும் நாளினிலே...

2 நாளாகமம் 20:20

உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவ ருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.


யோசபாத் என்னும் ராஜா யூதாவை ஆட்சி செய்த காலத்திலே, மோவாப், அம்மோனியர், மற்றும் அவர்களோடு இருந்த மனுஷரும், திரளான ஜனங்களோடு யூதாவிற்கு விரோதமாக யுத்தம் செய்ய வந் தார்கள். அப்பொழுது யோசபாத் அந்த திரளான கூட்டத்திற்கு பயந் ததினால், கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத் திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதா விலுள்ள எல்லாப் பட்டணங் களிலும் இருந்து ஜனங்கள் அவர்கள் கர்த்த ரைத் தேட வந்தார்கள். யூதா கோத் திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜா திகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். அப்பொழுது யோசபாத் கர்த்தரை நோக்கி: எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. நாங்கள் செய்யவேண்டியது இன்ன தென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்று தங்கள் உண்மை நிலை யை தெரியப்படுத்தினார்கள். தேவனாகிய கர்த்தர் அவர்களை நோக்கி: நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது என் றார்.” மறுநாள் அதிகாலமே, யோசபாத் ராஜா தேவனை துதிக்கும்படி க்கு, ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாட வும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கி னபோது, அவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வந்த எதிரிகளை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் எதிரிகள் தங்களையே தாங்கள் அழித்துக் கொண்டார்கள். பிரியமான வர்களே, உங்கள் பெலத்திற்கு மிஞ்சிய சாவல்களைக் கண்டு பின்வா ங்கிப் போகாமல், முழு உள்ளத்தோடு, உங்கள் உண்மை நிலையை தேவனுக்குக் தெரியப் படுத்துங்கள். கர்த்தரை நம்புங்கள், அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அவருடைய கிருபையை உயர்த்திப் பாடு ங்கள். உங்கள் வாழ்க்கையில் விடுதலையும் வெற்றியும் உண்டாகும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்;த்தாவே, நான் பயப்படுகிற நாளில் உம்மையே நம்புவேன். தேவரீர் நீர் என் பட்சத்தில் இருக்கும்படி நான் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 56:9-11