புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2021)

கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்

வெளிப்படுத்தல் 14:13

கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது


“போதகரே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருகின்றார் என்று அவரை விசுவாசித்து வாழ்ந்த பரிசுத்தவான்கள் பலர் இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றிருக்கின்றார்கள். அது போலவே, கர்த்தர் வர தாமதமா னால், நானும் கூட ஒரு நாள் இந்த சரீரத்தைவிட்டு சென்றுவிடுவேன், அப்படியானால் இயேசு மறுபடியும் வரும் போது, அப்படியாக அவரு டைய வருகையை எதிர்பார்த்திருந்த பக்தர்களுக்கு என்ன நடக்கும்” என்று ஒரு மனிதன் போதகரைக் கேட் டான். அதற்கு அந்தப் போதகர், மகனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மரிக்கும் பரிசுத்தவா ன்கள், “கிறிஸ்துவுக்குள் மரிக்கின்றா ர்கள்” அல்லது “கர்த்தருக்குள் நித்தி ரையடைந்திருக்கின்றார்கள்”. இயேசு கிறிஸ்து வர தாமதமானால், அவருடைய வழியில் நடக்கும் நாமும் ஒருநாள் கர்த்தருக்குள் நித்திரையடைவோம். இது கர்த்தருடைய பரிசு த்தவான்களின் மரணம். கர்த்தர் இப்போது வருவாராக இருந்தால், அப்பொழுது இன்றுவரை கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;. பின்பு, உயிரோடிருக்கும் நாமும் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள் மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்வி தமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். இப்பொழுது இருக் கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப் பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. கர்த்தரா கிய இயேசு கிறிஸ்து தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த் தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்;, ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம் எல்லோர்மேலும் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். சகோ தரரே, கர்த்தருடைய நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளுக்குரியவர்கள் அல்லவே. நீங்களெ ல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக் கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகை யால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமை யையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை தேவன் அளிப்பார்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, இந்த உலகத்தின் அந்தகாரக் கிரியைகளை எங்களை விட்டு களைந்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, சோர்ந்துபோகாமல், நற்கிரியைகளை நடப்பிக்க கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:6-7