புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2021)

ஆயத்தமா?

வெளிப்படுத்தல் 22:12

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.


பல்கலைக்கழக அனுமதிக்கான ஆண்டிறுதிப் பரீட்சைக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றது, எனவே பாடங்களை கருத்துடன் படியுங்கள் என்று பாடசாலையின் அதிபர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அந்த மாணவர்களிலே சிலர், அதிபரின் அறிவுரையை மனதில் கொண்டவர்களாய், தங்கள் பாடங்களிலே அதிக கவனத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆனால், வேறு சில மாணவர்கள், அதிபரின் அறிவுரையை கேட்டபின்பும் தங்கள் விளையாட்டு த்தனத்திலிருந்து ஒயாமல், தங்கள் நேரத்தை விரயப்படுத்தினார்கள். இன்னும் சிலர், அதிபரின் அறிவுரை யைக் கேட்டு கவனமாக படிக்கின்ற மாணவர்களை கேலி செய்து வந்தா ர்கள். ஆனால் “ஆண்டிறுதிப் பரீட்சை க்கு இன்றும் ஆறு மாதங்களே இரு க்கின்றது எனவே பாடங்களை கருத்துடன்படியுங்கள்” என்ற அறிவுரையானது யாவருக்குமே கூறப்பட்டது. கருத்துடன் படிப்பவர்களுக்கும், விளையாட்டுதனமாக இருப்பவர்களுக்கும், படிக்கின்ற மாணவர்களை கேலி செய்பவர்களுக்கும் ஆறு மாதங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த காலம் நிறைவேறும் போது, மாணவர்கள் யாவரும் பரீட்சையிலே நிற்க வேண்டிய நாள் உண்டு. அதிலே எந்த மாற்றமும் இருக்காது. அதுபோலவே, “மனம் திரும்புங்கள், ஆண்டவர் இயேசு வருகின்ற காலம் சமீபமாக இருக் கின்றது” என்ற அறிவுரையானது மனிதர்கள் யாவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதைக் கேட்ட சில மனிதர்கள், தேவ பயத்துடன் அந்த நாளுக்காக ஆயத்தப்படுகின்றார்கள். வேறு சிலர், அதைக்; கேட்டும், அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல், உல்லாசமாக வாழ்ந்து வருகின்றார்கள். வேறு சிலர், தங்கள் துன்மார்க்கமான வாழ்விலே வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தேவனுக்கு பயந்து அவர் வழிகளிலே வாழும் மனிதர்களைப் பார்த்து கேலி செய்கின்றார்கள். ஆனால் இவர்கள் யாவருக்கும் இந்த பூமியிலே அவர்களுக்கு குறிக்கப்பட்ட வாழ்நாட்கள் உண்டு. அந்த நாட்களிலே மனிதர்கள் எப்படி வாழ்கின்றார்களோ, அதற்குரிய பலனை அவரவர் அடைந்து கொள்வார்கள். பிரியமானவர்களே, அதிபரின் அறிவுரையைக் கேட்டு, தங்களை பரீட்சைக்கு ஆயத்தப்படுத்திய மாணவர்களைப்போல, நீங்கள் ஆண்டவர் இயேசுவின் வருகையின் நாளுக்காக ஆயத்தப்படுங்கள். ஆண்டவர் இயேசு சீக்கிரமாய் வருகின்றார்.

ஜெபம்:

வாக்கு மாறாத தேவனே, ஆண்டவராகிய இயேசுவின் வருகையின் நாளை எதிர்பார்த்து பரிசுத்த வாழ்க்கை வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேது 3:12

Category Tags: