புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2021)

பிரகாசமுள்ள மனக்கண்கள்

ரோமர் 12:2

உங்கள் மனம் புதிதாகிறதி னாலே மறுரூபமாகுங்கள்.


பொதுவாக மருத்துவர்கள்;, மனிதனுடைய இருதயத்தின் அமைப்பை யும், அதன் செயற்பாடுகளையும், அது எப்படியாக குருதித் தொகுதி யோடு இணைக்கப்பட்டிருக்கின்றதென்தையும்பற்றியும் விளக்கமாக கற் றுக் கொள்கின்றார்கள். அவர்கள் அப்படியாக கற்றுக் கொள்வதற்கு கார ணங்கள் உண்டு. ஆனால் ஒரு மருத்துவரானவர் தன் முழு இருதய த்தோடு தேவனாகிய கர்த்தரை சேவிப்பதற்கு, எத்தகைய மருத்துவ நுட் பங்களும் அவசியமில்லை. இன்று அநேக மனிதர்கள், வேதத்தின் ஆழ த்தை அறிய வேண்டும் என்று கூறி, சரித்திர நூல்களையும் படித்து, வேத த்திலே கூறப்பட்டிருக்கும் சம்பவங் கள் நடந்த இடங்களைப் பற்றியும், வேத த்திலுள்ள நூல்கள் யாரால்? எப்போது? எந்த நூற்றாண்டில் எழு தப்பட்டது என்றும் அதிகதிகமாக ஆராய்கின்றார்கள். அதற்காக பல பாi~களை கற்றுக் கொள்கின்றார்கள். பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பல பட்டங்களை பெற்றுக் கொள்கின்றார்கள். அப்படியாக ஆரா ய்ந்து அறிவதில் தவறு ஏதும் இல்லை ஆனால் கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண வளர்ச்சியடைய வேண் டும் என்ற எண்ணமற்றவர்களாக அறிவை மட்டும் வளர்ப்பதினாலே, நாளடைவில் அவர்களுடைய மனக்கண்கள் குருடாகிவிடுகின்றது. இத னால் வேதத்தை அறிந்தும் ஆண்டவர் இயேசுவை அறியாதவர்களாக மாறி விடுகின்றார்கள். ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு தெருவிலே இருந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பிறவிக் குருடனொருவனைக் கண்டு, அவனை பார்வையடையும்படி செய்தார். அந்நாட்களிலே இரு ந்த வேத வல்லுனர்களைப் போல அந்த மனிதன் பார்வையற்றவன் வேத த்தை கற்றிருக்கவில்லை. சமுக அந்தஸ்தோ, உலக ஆஸ்திகளோ அந்த ஏழையிடம் இருந்ததில்லை. அவன் பார்வையடைந்த பின்பு இயேசு வைக் கண்ட போது, தாமதமின்றி, ஆண்டவரே, நான் உம்மை விசுவா சிக்கிறேன் என்று சொல்லி, இயேசுவை பணிந்து கொண்டான். ஆனால், அன்றைய நாட்களிலே வாழ்ந்த வேதத்தை நன்றாக கற்றறிந்திருந்த மத த்தலைவர்களோ ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ளக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும், தங்கள் இருதயத்தை கடினப்படுத்துக் கொண்டார்கள். கிறிஸ்துவை அறிய முடியாமல் இவர்கள் மனக்க ண்கள் குருடாக இருந்தது. பிரியமானவர்களே, நாளுக்கு நாள் கிறிஸ் துவின் சாயலிலே வளர்ந்து பெருகுவதிலேயே அதிக கருத்துள்ளவ ராயிருங்கள். உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என்னுடைய அழைப்பையும் அதன் மேன்மை யும் உணர்ந்து, அதன்படிக்கு நாள்தோறும் தேவ சாயலிலே வளர்ந்து பெருகும்படிக்கு என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:11