புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2021)

மனமிரங்கும் ஆண்டவர் இயேசு

மாற்கு 10:52

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.


பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறா ரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குரு டனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என் றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வை யடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். பாருங்கள், ஆண்டவராகிய இயேசு அவனிடத்தில் வரு வதற்கு அவனை அநேகர் தடை செய்தார்கள். ஆண்டவரை தொந்தரவு செய்யாதே என்று பார்த்திமேயுவை அதட்டினார்கள். ஆனால் அவன் தன் ஆண்டவரை கூப்பிடுவதை நிறுத்திவிடவில்லை. அவன் குருடானாக இருந்தபடியால், அவனுக்கு தூர இடங்களுக்குச் சென்று இயேசுவை சந்திக்க முடியாதிருந்தது, ஆனால் அவர் அருகிலே வந்திருக்கின்றார் என்று அறிந்து கொண்ட போது, பார்த்திமேயு அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், அவரை விசுவாசத்தோடு கூப்பிட்டான். பிரியமானவர்களே, இன்று ஆண்டவராகிய இயேசுவை தேடுவதற்கு அவர் தூர தேசத்தில் இருக்கின்றவர் அல்லர். அவருடைய பிரசன்னத்தை உணர முடியாதபடிக்கு ஒருவரும் உங்களை தடை செய்ய முடியாது. பயனற்ற பாத்திரம் என்று அவர் ஒருவரையும் தள்ளிவிடுபவர் அல்லர். உங்கள் அறைவீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆண்டவர் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள். மனமிரங்கும் தெய்வம் இயேசு தம்மை தேடுகின்றவர்களுடைய சத்தத்தைக் கேட்டு பதில் கொடுகின்றவராகவே இருக்கின்றார். எனவே, கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், விசுவாசத்தோடு ஆண்டவர் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார்.

ஜெபம்:

மனமிரங்கும் தேவனே, உம்மை நோக்கிப்பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள்;. அவர்களை நீர் வெட்கப்பட்டுபோக விடுவதில்லை என்பதை விசுவாசித்து உம்மை பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:4-6