புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2021)

எங்கே ஓடுவேன்?

சங்கீதம் 139:7

உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?


ஒரு மனிதனானவன், தன் இளைமைக் காலத்தில் செய்த குற்றமொ ன்றினாலே, ஊரிலுள்ள ஜனங்கள் மத்தியிலே பெரும் அவமானமடை ந்தான். அந்த ஊரிலுள்ள சிலருடைய ஓயாத நிந்தையான பேச்சுக்களை சகித்துக் கொள்ளக்கூடாமல் தூர தேசமொன்றிற்குச் சென்றான். தான் விட்டுவந்த ஊரிலுள்ளவர்களின் தொடர்பை முற்றாகத் துண்டித்துக் கொண்டான். தன் வாழ்வை சீர்திருத் திக் கொள்ள அவனுக்கு ஒரு அரு மையான சந்தர்ப்பம் கிடைத்திருந்த போதும், அவன் தன் இளமைக் கால த்தின் பாவ சுபாவத்திலிருந்து விடுத லையடைய மனதற்றவனாக இருந் தான். அந்த அந்நிய தேசத்திலே அங்குள்ள ஜனங்களுக்கு அவன் முகமறியாதவனாக இருந்ததால், அவன் தன் இ~;டப்படி வாழ்ந்து வந் தான். அது தனக்குக் கிடைத்த விடுதலை என்று எண்ணிக் கொண்டான். ஒரு மாணவன் தான் படிக்கும் பாடசாலையைவிட்டு இன்னுமொரு ஊரிலுள்ள பாடசாலைக்கு செல்லலாம் ஆனால் அந்த மாணவனுக்கு படிக்கும் விருப்பம் இல்லாதிருந்தால் அதனால் என்ன பலன்? ஒரு மனிதன், தன் வேலைதளத்திலே, ஏற்பட்ட வாக்குவாதமொன்றினாலே இன்னுமொரு ஸ்தானத்திலே வேலையை பெற்றுக் கொண்டான். ஆனால், அவனோ வாக்குவாதம் செய்வதைவிட்டுவிட மனதில்லாதவ னாக இருந்தான். இதே போலவே, இன்றைய நாட்களிலே மனிதர்கள் தங்களை மாற்ற மனதில்லாமல், தங்கள் வீட்டையும், தங்கள் வாழ்க் கைத் துணையை, உடுத்தியிருக்கும் உடையை மாற்றுவது போல இலகுவாக மாற்றிவிடுகின்றார்கள். இத்தகைய செயல்கள் இந்த உலக போக்கிற்கு ஏற்புடையதாக இருப்பதால், தாங்கள் விரும்பிய மனிதர்க ளுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு, நீதி நியாயத்தைப் பேசும் மனிதர்களுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றார்கள். சபை ஐக்கியங்களிலும், மனக் கசப்புக்கள் ஏற்படும் போது, தங்கள் சுபாவங் களை மாற்ற விருப்பமில்லாமல் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு இன்னுமொரு இடத்திற்குப் போய்விடுகின்றார்கள். ஆனால், தேவனுக்கு மறைவாக நாம் எங்கே போக முடியும்? இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றவர் மனிதனுடைய நினைவுகளை அறிந்திருக்கின்றார். பிரிய மானவர்களே, நம் வாழ்வில் நெருக்கங்கள் ஏற்படும் போது, முத லாவதாக, வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று நாம் நம்முடைய வாழ்க்கையை வேத வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்த்து, தேவ சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்முடைய ஆவிக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்து, வேதனையுண்டா க்கும் வழியைவிட்டு, உமக்கு பிரியமான வழியில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:12