புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2021)

தேவனுக்கு பயந்திருங்கள்

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீ னத்தைத் துர்க்குணத்தி ற்கு மூடலாகக் கொண்டி ராமல், தேவனுக்கு அடி மைகளாயிருங்கள்.


பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பாடசாலையின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டிருக்கின்றார்கள். பொதுவாக மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும், பாடசாலை அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்பதைக் குறித்து தயங்குவார்கள். ஏனெனில், அதனால் பின்விளைவுகள் ஏற்ப டும். பிள்ளைகளுடைய படிப்பும், எதிர்காலத்திலும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மனதிலே இருக்கும். அத னால், பாடசாலையின் ஒழுங்கு முறைக ளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படி முயற் சிக்கின்றார்கள். வேலைக்குச் செல்லும் மனிதர்கள், வேலைத்தளத்திலே, தங் கள் வாயின் வார்த்தைகளைக் குறித் தும், நடவடிக்கைகளைக் குறித்தும் மிக வும் எச்சரிக்கையாக இருப்பார்கள். பிர ச்சனைகள் ஏற்ப்படுவதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்கின்றவர்களாயிரு ப்பார்கள். ஏனெனில், அப்படி இல்லா விடின் வேலையை இழக்க நேரிடலாம் அல்லது பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகளும் சலுகைகளும் தடைப்படலாம் என்ற பயம் அவர் கள் மனதிலே இருக்கின்றது. வெளியிடங்களிலே, மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளைக் குறித்து கவனம் செலுத்துவார்கள். அதாவது, முடிந் தளவு நாட்டின் சட்டத்திற்கு விரோதாமாகக் காரியங்களைச் செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். ஏnனினல், சட்டவிரோதமான நடிவடிக்கை களினால் பெரும் பின்விளைவுகள் ஏற்படலாம் என்று அவர்கள் மன திலே பயம் இருக்கின்றது. தண்டனையும், பின்விளைவுகளும் உடனடி யாகக் கிடைப்பதினால் மனிதர்கள் பாடசாலையிலும், வேலைத்தளத்தி லும், வெளியிடங்களிலும் முடிந்தளவு தாங்கள் சுயஇ~;டப்படி நடந்து கொள்ளாமல், ஒழுங்கு முறைகளைக்கடைப்பிடித்து, அநியாயங்க ளையும் சகித்துக் கொள்கின்றார்கள். ஆனால், அதே மனிதர்கள் சபை ஐக்கியத்திற்கு வரும் போது, எதைக்குறித்தும் சிந்திக்காமல், துணிக ரமாக அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்கின்றார்கள். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று, தேவன்தாமே நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார் இதை மறந்து, தேவ கிரு பையை விருதாவாக எண்ணிக் கொள்கின்றார்கள். இந்த சபையில்லா விட்டால் இன்னுமொரு சபை, இந்தப் போகதர் இல்லையென்றால் இன் னுமொரு போதகர் என்று முரட்டாட்டம் கொள்கின்றார்கள். பிரியமான வர்களே, தேவன் கொடுத்த சுயாதீனத்தை உங்கள் துர்க்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தாமல், தேவனுக்கு பயந்திருங்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, நீர் கிருபையாய் தந்திருக்கும் சுயாதீனத்தை விருதாவாக எண்ணி, என் இஷ்டப்படி நடந்து கொள்ளா மல், உம்முடைய சித்தப்படி நான் மனத்தாழ்மையோடு வாழ வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:3-10