புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 04, 2021)

கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள்

ரோமர் 12:10

கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.


ஒரு மாணவனானவன், பாடசாலையிலே சில குழப்பங்களை செய்து கொண்டு வந்தபோது, பாடசாலையின் அதிபர், அவனையும் அவன் பெற்றோரையும் அழைத்து, அவர்களோடு பேசினார். அந்த மாணவ னானவன், தன் போக்கை மாற்றாதவிடத்து, அவன் பாடசாலையிலே யிருந்து நீக்கப்படக்கூடிய நிலைமை உண்டாகலாம். அப்படி அவன் நீக்கப்பட்டால், அந்த அறிக்கையானது, நாட்டின் பாடசாலைகளின் திணைக்களத்தின் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என்று கூறினார். இதை கேட்ட மாணவனின் பெற்றோர், தங்கள் மகனானவனுடைய எதிர்காலம் பாழாய் போகப்போகின்றதே என்று மிகவும் கலக்கமடைந்து, அவனுக்கு நல்ல புத் திமதிகளைக் கூறி, அவனை நல் வழிப்ப டுத்தும்படி அவனுடைய நாளாந்த நடவடிக்கைகளைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களானார்கள். அந்த மாணவனும், தான் பாடசா லையிலிருந்து நீக்கப்படுவதைக் குறித்து பயந்து, தான் மற்றய மாண வர்கள் முன்னிலையில் அவமானமடையக் கூடாது என்று தன் போக்கை மாற்றிக் கொண்டான். இப்படியாக மனிதர்கள், வெளியிடங்களிலே, அதிகாரங்களுக்கு பயந்து தங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட அதிகாரங்களோடு கனத்துடனும் அமை தலாகவும் வார்த்தைகளைப் பேசி, அவர்களுக்கு எதிர்த்து நிற்பதற்கு தயங்குவார்கள். ஆனால் சபை ஐக்கியங்களிலே, தங்கள் பிள்ளை களை நல்வழிப்படுத்தும் அதிகாரங்களுக்கு, தயக்கமின்றி எதிர்த்து நிற் பதற்குத் துணிகரம் கொள்கின்றார்கள். இந்த பூமியிலே தங்களுடைய பிள்ளைகள் அவமானமடையாமல் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசிக்கின்றார்கள். ஒருவேளை, பாடசாலையிலே தவறினால், நாம் முன்னேறுவதற்கு இந்த பூமியிலே வேறு வழிகள் உண் டாயிருக்கலாம் ஆனால், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள் ளாமல் வாழும் வாழ்க்கையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் நியமித்த கண்கண்ட அதிகாரங்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுக்காமல் துணிகரமான வார்த்தை களைப் பேசுகின்றவர்கள், எப்படி கண்காணாத தேவனுக்கு கனத்தை கொடுப்பார்கள்? பிரியமானவர்களே, நன்றாய் விசாரணைசெய்கிற மூப் பர்களை, விசே~மாகத் திருவசனத்திலும் உப தேசத்திலும் பிரயாசப்ப டுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண் டும். கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, எங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நாங்கள் மதித்து நடக்க தாழ்மையுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 5:17