புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2021)

கர்த்தரில் பெலப்படுங்கள்

எபேசியர் 6:10

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


ஒரு வாலிபன் தான் சிறந்த ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரனாக வர வேண்டும் என்ற குறிக்கோளோடு, தனக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்ப ங்களிலும் கிரிக்கெட் விளையாட்டைப் பயிற்சி செய்து கொள்வான். தன் வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்திற்கு சென்று அங்கே பயிற்சி செய்யும் மற்றவர்களோடு சேர்ந்து தானும் பயிற்சி செய்து கொள் வான். சில வாலிபர்களோடு விளையா டும் போது, அவன் தோற்றுப் போய்வி டுவான். அப்படி அவன் தோற்றுப் போகும் போது, பின்வாங்கிப் போகா மல், அவர்களோடு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மறுபடியும் அதே வாலிபர்களோடு சேர்ந்து அதிக நேரம் விளையாடிக் கொள்வான். இந்த வாலிபன் தன்னை பரீட்சைக்குட்படுத்தி, தன் நிலையை தானே நிதானித்தறிந்து, முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடைய வனாக இருந்தான். அது போல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை எங்கே நடைபெறுகின்றது? வீட்டிலா? வேலையிலா? பாடசாலையிலா? வெளியிடங்களிலா? சபையிலா? குறிப்பாக ஒரு இடத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை வாழ்க்கையின் கிரியைகள் வழியாக காண்பிக்க வேண்டும். எனினும், எப்படியாக தேவனுக்கு பிரியமாக வாழ்வதென்பதை கற்றுக் கொண்டு, கற்றவைகளைப் பயிற்சி செய்வதற்கு சபை ஐக்கியமானது ஒரு சிறந்த இடமாக இருக்கின்றது. அந்த வாலிபன் மைதானத்திற்குச் சென்று பலதரப்பட்ட வாலிபர்களோடு சேர்ந்து விளையாடும் போது தான் குறை வுபட்டிருக்கும் இடங்களை அறிந்து கொண்டது போல, நாமும் நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்கு நாம் கூடிவரும் சபை ஐக்கியமானது சிறந்த இடமாக இருக்கின்றது. சபையிலே கூடிவரும் பலதரப்பட்ட மற்றய மனிதர்களோடு ஐக்கியமாக இருக்க முடிகின்றதா? சபையின் அதிகாரங் களுக்கு கீழ்ப்படிய முடிகின்றதா? மனத்தாழ்மையை காண்பிக்க முடிகி ன்றதா? தேவனுக் கென்று நான் என் நேரத்தை கொடுக்க விரும்புகி ன்றேனா? தேவனுடைய வார்த்தையை கேட்க ஆர்வமாக இருக்கி ன்றேனா? என்று நம்மை நாம் கேட்டுக் கொள்ள முடியும். நம்மை நாமே நிதானித்தறிந்து, நம்முடைய பெலவீனங்கள் நீங்கும்படிக்கும், தீங்கு நாளை ஜெயிக்கும்படிக்கும், கர்;த்தரிலும் அவருடைய திவ்விய வல்லமையிலும் நாம் பெலப்படுவோமாக.

ஜெபம்:

என்னை பரிசுத்தமாக்கும் தேவனே, நான் என் பெலவீனங்களை பாராமுகமாக விட்டுவிடாமல், அவைகளை ஆராய்ந்தறிந்து, உம் திவ்விய வல்லமையால் அவைகளை மேற்கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 13:5