புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2021)

திருடன் ஏன் வருகின்றான்?

யோவான் 10:10

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.


ஒரு ஊரிலே வசித்து வந்த குடும்பத்தினர், ஒரு நாள் வெளியே சென்று வீடு திரும்பிய போது, தங்கள் வீட்டிற்குள் திருடர்கள் உள்ளிட்டி ருக்கின்றார்கள் என்று அறிந்து கொண்ட போது உடனடியாக அவர்கள் பொலிசாரை அழைத்தார்கள். பொலி சார் அவ்விடத்திற்கு வந்து, அந்த வீட்டையும், அது உடைக்கப்ப ட்டிருக்கும் விதத்தையும் ஆராய்ந்து பார்த்தபின்பு தங்கள் அறிக்கையை சமர்பித்தார்கள். அதன்படி, குறிப்பிட்ட அந்த வீட்டின் ஒரு ஜன்னலின் பூட்டு சரியாகப் போடப்படவில்லை. இதை நன்கு அறிந்தவர்களே, இலகுவாக உங்கள் வீட்டிற்குள் உள்ளிட்டு திரு டியிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். தன் இருதயத்திலே திருட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன், அவன் எந்த வீட்டிற்குச் சென்றாலும், எப்படியாக அந்த வீட்டிலுள்ள விலையேறப்பெற்ற பொரு ட்களைத் திருடலாம் என்ற எண்ணமுள்ளவனாய் இருப்பான். அந்த வீட்டைத் தான் திருட முடியாவிட்டாலும், தனக்கு அறிமுகமான வேறு திருடர்களை அவ்விடத்திற்கு அனுப்பிவைப்பான். பிரியமானவர்களே, நம்முடைய ஆத்துமா பாதாளத்திலே அழிந்து போகும்படியாகவே, ஏதேன் தோட்டத்திலே, திருடனாகிய பிசாசானவன், நம்முடைய ஆதிப் பெற்றோரை வஞ்சித்தான். அவர்களுடைய வாழ்விலிருந்த விலை மதிக்க முடியாத, தேவ சாயலை, தேவன் உலாவும் இடத்திலே, அவர் சமூகத்திலே வாழும் இன்பமான வாழ்வை திருடிக் கொண்டான். நாம் இழந்து போன தேவசாயலை மறுபடியும் பெற்றுக் கொள்ளும்படிக் கான வழியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உண்டாக்கினார். நித் திய ஜீவனைத் தரும் அந்த வழியிலே, மேய்ப்பராகிய இயேசு நம்மை வழிநடத்திச் செல்கின்றார். இந்த விலைமதிக்க முடியாத இரட்சிப்பை மறுபடியும் திருடிக் கொள்வதே பிசாசானவனுடைய நோக்கம். அதை பிசாசானவன் திருடிக் கொள்வதற்கு நாம் வழி களை திறந்து வைத் திருக்கக் கூடாது. நாம் உலகோடு ஒத்துப்போக வேண்டும் என்று உலக போக்கோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வோமென்றால், நாமே நம்முடைய வாழ்வின் சமாதானத்தை குலைத்துப் போடுகின்ற வர்களாக இருப்போம். நாம் அப்படியிராமல், நாம் பெற்றுக் கொண்ட விலை மதிக்க முடியாத இரட்சிப்பை காத்துக் கொள்ளும்;படிக்கு, மேய்ப்ப னாகிய இயேசுவின் வழியிலே நடந்து செல்வோமாக.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்காக அழைத்த தேவனே, நான் இந்த உலக போக்கோடு தொடர்புகளை ஏற்படுத்தி, அதனால், நீர் கொடுத்த இரட்சிப்பை இழந்து போகாதடிக்கு, அதைக் காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8