புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2021)

மனதிலே பல யுத்தங்கள்

உபாகமம் 20:4

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம் பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோ டேகூடப் போகிறவர் உங் கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.


நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகை யில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்ட மாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக. உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும் போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி: இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துரு க்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர் கள்; உங்கள் இருதயம் துவளவே ண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோ டேகூடப் போகிறவர் உங்கள் தேவனா கிய கர்த்தர் என்று சொல்லவேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் மோசே என்னும் தேவ ஊழியர் வழியாக, தம்முடைய ஜனங்களுக்கு வாக்குத்த த்தத்தைக் கொடுத்தார். பிரியமானவர்களே, நமது வாழ்க்கையிலே நாம் எதிர்நோக்கும் பலவிதமான நெருக்கங்களால், வருங்காலத்தை குறித்த கவலைகள் நம்மில் சிலரை கடுமையாக வாட்டலாம். வேறு சிலர் சமு கத்தின் மத்தியிலே ஒடுக்கப்பட்ட நிலையிலே இருக்கலாம். இப்படி யாக மனிதனுடைய மனதிலே பல போராட்டங்கள் உண்டு. சில வேளை களிலே நம் முன் நிற்கும் பிரச்சனைகள் மலைபோன்ற துன்பமாக இரு க்கலாம். இவை பெரிதும் கெடிதுமாக இருக்கின்றதே எங்களுடைய பெலத்திற்கு மிஞ்சியிருக்கின்றதே என்று நாம் மனம் சோர்ந்து போக லாம். அந்த வேளைகளிலே “என் தேவனாகிய கர்த்தர் என்னோடு கூட இருக்கின்றார், இந்த உலகத்திலிருக்கிறவனிலும் என்னோடு இருக்கும் இயேசு பெரியவர்.” என்று விசுவாச அறிக்கையிடுங்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். நீங்கள் விரும்பும் சமாதானம் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் உண்டு. நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாதிரு ங்கள். இயேசுவின் நாமத்தை அறிக்கையிடுங்கள். அவர் உலகத்தை ஜெயித்தவராயிருக்கின்றார்.

ஜெபம்:

நான் உன்னுடனே கூட இருக்கின்றேன் என்று வாக்குரைத்த தேவனே, நீர் ஒருவரே என் நிலைமையை நன்றாக அறிந்திருக்கிறவரும், நீர் ஒருவரே என்னை விடுவிக்கும் தெய்வம் என்றும் இன்று அறிக்கையி டுகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33