புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2021)

நன்மையை கண்டடைகின்றவன் யார்?

சங்கீதம் 112:1

அல்லேலூயா, கர்த்தருக் குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனு ஷன் பாக்கியவான்.


ஒரு ஊரிலே இயங்கி வந்த உடற்பயிற்சி கழகமொன்றிலே, தேச மட்டத் திலே பிரபல்யமான ஒரு விiயாட்டு வீரன் இணைந்து கொண்டதால் அது அந்த கழகத்திற்கு நன்மதிப்பையும் பெருமையையும் பெற்றுத் தந்தது. அதனால், இன்னும் அதிகமான மனிதர்கள் அந்த கழகத்தில் சென்று இணைய ஆரம்பித்தார்கள். கருப்பொருளானது, அந்த பிரபல்யமான விளையாட்டு வீரனால் அந்த அமைப்பிற்கு நன்மை உண்டானது. இவ்வண்ணமாக, இன்றைய நாட்களிலே பிரபல்யமான நட்சத்திரங்களில் ஒருவர் அல்லது இந்த உலக முறைமையின்படி கல்விமானாக கருதப்படுமொருவர் கிறிஸ்துவை ஏற் றுக் கொள்ளும் போது, அது கிறிஸ் தவத்திற்கு நல்லது என்று ஒரு சில மனிதர்கள் கருதுகின்றார்கள். ஒரு விஞ்ஞானி, வேதத்திலே தேவ ஆவியினாலே உரைக்கப்பட்டிருக்கும், சத்தியங்கள் அல்லது தீர்க்கதரிசனங்களில் ஒன்று விஞ்ஞானத்தின்படி ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது என்று கூறும் போது அது தேவனுக்கு நல்லது என்று சிலர் எண்ணுகின்றார்கள். கீழ்மக்கள் மாயையும், மேன் மக்கள் பொய்யுமாமே. இந்த உலகிலே மனிதர்கள் கீழ்மக்கள் என்றும் மேன்மக்களென்றும் வகுக்கப்படலாம் ஆனால் மனிதர்கள் பிரபுக்களாக இருந்தாலும், குடிமக்களாக இருந்தாலும், கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளிலே நடக்கின்றவர்கள் மாத்திரமே பாக்கியவான்கள். தேசத்திலு ள்ள பிரபு ஒருவன் இயேசுவை ஏற்றுக் கொண்டான் அதனால் நான் இயேசுவை ஏற்றுக் கொள்கின்றேன் என்பது இரட்சிப்பல்ல. அப்படி ப்பட்ட மனிதன் இயேசுவின் மேல் அல்ல அந்த பிரபுவின்மேல் தன் நம்பிக்கையை வைத்திருக்கின்றான். ஒரு பாடகன் ஆண்டவர் இயே சுவை தன் உள்ளத்திலே விசுவாசித்து, இரட்சணியப்பாடல்களை பாடு வது அவனுடைய சிலாக்கியம். ஐசுவரியவான் தன் நம்பிக்கையை கர்த் தர்மேல் வைக்கும்படி தன்னைத் தாழ்த்துவது அவன் ஆத்துமாவிற்கு நல்லது. உலகத்திலுள்ள கல்விமான்கள் மெய் ஞானத்தைக் கண்ட டை யும்படி கர்த்தருக்கு பயப்படுவது அவர்களுக்கு நல்லது. “தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனு~ன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனு~ன் பிரயாசப்பட்டாலும் அறியமா ட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.” (பிரசங்கி 8:17)

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய வார்த்தையின் மகத்துவங்களை நான் உணர்ந்து நன்மையை கண்டடையும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 21:30