புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2021)

தேவன் விளம்பிய வேதம்

சங்கீதம் 119:72

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.


ஒரு வாலிபன் ஒரு குறிப்பிட்ட பெண்ணொருத்தியை விரும்பியிருந்த தால் அவளை திருமணம் செய்து தரும்படியாக அவளுடைய பெற்N றாரை கேட்டுக் கொண்டான். திருமணப் பேச்சுக்கள் நடந்து கொண் டிருக்கும் போது, அந்த பெண்ணின் வீட்டாரிடம் இருந்த சொத் துக்கள் யாவையையும் அவளுக்கு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அதற்கு பெண்ணுடைய பெற்றோர்: எங் களுக்கு இன்னும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள் எனவே, எல்லாவ ற்றையும் கொடுத்துவிட முடியாது என்று கூறினார்கள். அதனால் கோப மடைந்த வாலிபன் இந்தத் திருமணம் எனக்கு வேண்டாம் என்று தன் வழி யிலே சென்று விட்டான். ஒருவரை ஒரு வர் விரும்பியிருக்கும் போது, “நீ என்னுடைய உயிர்” “உனக்காக எதையும் இழக்க தயாராக இருக்கின் றேன்;” என்று உணர்வுகளை தூண்டும் பல கவிதைகளை கூறிக்கொள் வார்கள். ஆனால், அந்தக் கவிதைகள் சோதனைக்குட்படுத்தப்படும் போது அதன் உண்மை நிலை வெளியாகின்றது. பிரியமானவர்களே, இந்த சம்பவத்தை சற்று நம்முடைய ஆவிக்குரிய வாழ்வோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம். தேவனுடைய அழைப்பை பெற்ற ஜனங்களும் “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.” என்று கூறிக் கொள்வார்கள். அந்த வசனம் உண்மையானது. ஏனெனில் தேவனுடைய வார்த்தையின் வழியாக மனிதனுக்கு நித்திய ஜீவன் உண்டாகின்றது. இந்த உலகத்திலே நாம் காணும் யாவும் அழிந்து போகும் ஆனால் தேவன் விளம்பிய வேத த்தினாலே நாம் அழியாமையை தரித்துக் கொள்கின்றோம். ஆனால் சோதனை வரும் காலத்திலே சிலர் தேவனுடைய வேதத்தைத் தள்ளி விட்டு, உலகத்தின் பொக்கி~ங்களாகிய பொன்னையும் வெள்ளியை யும் பற்றிக் கொண்டு விடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, வேலை செய் யும் இடத்தில் உண்மையைக் கூறினால் வேலை போய்விடும், வேலை போனால் எப்படி உண்பது, எதை உடுத்துவது, யார் வாடகை பணம் கொடுப்பார்கள் என்று சிலர் பொய்யை கூறிவிடுகின்றார்கள். ஆனால், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்று வேதம் கூறுகின்றது. எனவே தேவன் நமக்கு கொடுத்த வேதத்தின்படி நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நித்திய வாழ்வை கொடுக்கும் நீர் விளம்பிய வேதத்தைத் கேட்டு, அறிக்கையிட்டு, அதன்படி உண்மையாய் வாழும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:31-34