புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2021)

இல்லமாகிய இருதயம்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தி னின்று ஜீவஊற்று புறப்படும்.


ஒரு புதிய வீட்டை வாங்கிய இளம் தம்பதிகள், அந்த வீட்டை அலங்கரி க்கும்படி கடைக்குச் சென்று தங்களுக்கு பிடித்த அழகானதும், தரமானது மான அலங்காரப் பொருட்களை வாங்கி வந்து, தங்கள் வீட்டை தங்கள் இஷ்டப்படி அலங்கரித்தார்கள். நாட்கள் கடந்து செல்லும் போது, வீட்டின் அழகை கெடுக்கும் பொருட்கள் எவை என்று பார்த்து அவை களை அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அகற்றி விட்டார்கள். இவ்வண்ணமாக பலரும் பார்த்து ஆசைப்படும் விதமாக தங்கள் வீட்டை சுத்தமாகவும், அழகா கவும், நல்ல அலங்காரத்தோடும் வைத் திருந்தார்கள். இன்றைய நாளிலே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து இருதயமாகிய எங்கள் வீட்டை யார் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறித்து தியானம் செய்வோம். அயலிலே உள்ள மனிதனொருவன், தகாத வார்த்தையால் உங்களை பேசிவிட்டான் என்று வைத்துக் கொள் வோம். அன்று இராத்திரியிலே, அவன் கூறிய தகாத வார்த்தைகளை தியானம் செய்வீர்களா? இல்லை நம்முடைய இருதயத்தை சுத்தப்படு த்தும் வேத வார்த்தைகளை தியானம் செய்வீர்களா? பகையினால் உங்கள் இருதயத்தை அலங்கரிக்கப் போகின்றீர்களா? அல்லது தேவ இரக்கத்தினால் பகையை மன்னித்து, இரக்கத்தினால் உங்கள் இருத யத்தை அலங்கரிக்கப் போகின்றீர்களா? தாங்கள் புதிதாக வேண்டிய வீட்டை எவ்வளவு கவனமாக அலங்கரித்து வைத்திருந்த அந்த இளம் தம்பதிகளைப் போல நாமும் நம்முடைய இருதயத்தை எல்லா தெய்வீக சுபாவங்களினாலும் அலங்கரிக்க வேண்டும். மாம்சத்தின் கிரியைகள் உங்கள் இருதயத்தில் குடிகொள்ள இடங்கொடுத்தால், அங்கே ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோ~ம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; போன்றவற் றிற்கு இடம் இருக்காது. அப்படிப்பட்ட இருதயத்தில் கலகமும் குழப்ப மும் உண்டாயிருக்கும். வீட்டிற்கு அவசியமற்ற பொருட்களை அகற்றி விடுவது போல, தேவையற்ற காரியங்களை உங்கள் இருதயத்தை விட்டு அகற்றி விடுங்கள். அழகானதும் தரமானதுமான பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வருவது போல, தேவ சமாதானத்திற்குரிய வைகளையே உங்கள் இல்லமான இருதயத்திற்குள் கொண்டு வாருங் கள். அவைகளே உங்கள் இருதயத்தின் அலங்காரமாக இருக்கட்டும்.

ஜெபம்:

தேவ சாயலடையும்படிக்கு என்னை அழைத்த தேவனே, என்னு டைய இல்லமாகிய இருதயம் தெய்வீக சுபாவங்களினால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்படி விழிப்புள்ளவனா(ளா)க வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8