புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2021)

சோதனைகளை ஜெயங்கொள்ளுங்கள்!

சங்கீதம் 4:4

நீங்கள் கோபங்கொண்டா லும், பாவஞ்செய்யாதிரு ங்கள்;


தன் வாழ்க்கை முழுவதும் வன்முறைகளிலும், தெருச் சண்டைகளிலும் ஈடுபாடாக இருந்து வந்த மனிதனொருவன், ஆண்டவராகிய இயேசுவை தன் வாழ்விலே சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். அந்த நாள் முதல் அவன் தன் பழைய வாழ்க்கையிலிருந்த குடி, வெறி, தூ~ணங்கள், சண்டைகள் யாவற்றையும் விட்டுவிட்டான். முன்பு அந்த மனிதனை கண்டால் ஓடி ஒளிந்து கொள்கின்றவர்கள் இப்போது அவ னும்; அவன் குடும்பத்தினரும் தெரு வழியாக கடந்து செல்லும் போது, தெருவிலே இருக்கும் வீணரான மனித ர்கள் ஏளனமாக வார்த்தைகளை அவர் கள் காது கேட்கும்படி பேசிக் கொள் வார்கள். பல ஆண்டுகளாய் பொறுமையாக இருந்த அந்த மனிதன், ஒரு நாள் தன் பொறுமையை இழந்து, தெருவிலே ஏளனம் செய்த மனி தர்கள் யாவரையும் அடித்து துரத்தி விட்டான். பல ஆண்டுகளாக பொறுத்திருந்தேன் ஆனால் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்று இப்படிச் செய்தேன் என்று அந்த மனிதனானவன் தன் வன்முறையான செயலைக் குறித்து நியாயம் கூறினான். பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும், நம்முடைய பழைய வாழ்க்கையில் விட்டுவந்த மாம்ச இச்சைகள் உண்டு. அவை கல்வி, அந்தஸ்து, உலக ஐசுவரியத்தின் பெருமையாக இருக்கலாம், தேவனைத் துதிக்கின்ற நாவினாலே மற்றவ ர்களை சபிக்கின்ற பழக்கமாக இருக்கலாம், விட்டு வந்த மத வழிபாடுக ளின் முறைமைகள் இருக்கலாம், மற்றும் வன்மம், கசப்பு, வைராக்கி யம், எரிச்சல், பொறாமை போன்ற மாம்ச இச்சைகள், அல்லது மறை வான பாவங்கள் இருக்கலாம். அவைகள் ஒரு காலத்திலே, இந்த உல கத்தினாலே உண்டான நம்முடைய பெலனாக கருதி நாம் வாழ்ந்து வந் திருக்கலாம். ஆனால் அவைகளை நாம் ந~;டமும் குப்பையுமென தள் ளிவிட வேண்டும். அவை மறுபடியும் தலைதூக்கும் சந்தர்ப்பங்கள் வாழ் க்கையிலே நிச்சயமாக ஏற்படும். குறிப்பாக சில மனிதர்கள் வழியாக நம்முடைய பழைய வாழ்விற்கு உயிர் கொடுக்கும் சோதனைகள் நம க்கு உண்டாகலாம். அப்படியான சோதனைகள் ஆரம்பிக்கும் வேளை யிலே அவைகளை நம் உள்ளத்தில் வேர் கொள்ளவிடாமல், நம் தேவ னுடைய வசனத்தினாலும், ஜெபத்தினாலும் நம்முடைய உள்ளத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

ஜெபம்:

உம்முடைய சமாதானத்தை எனக்கு தந்த தேவனே, அந்த சமாதானத்தை குழப்புகின்றவர்களுக்கு என் உள்ளத்தில் இடங் கொடு க்காமல் உம் வார்த்தையையே என் தியானமாக கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:8-16