புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2021)

மனத்தாழ்மையோடு பணி செய்யுங்கள்

பிலிப்பியர் 2:3

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒரு வரையொருவர்தங்களி லும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.


ஒரு சனசமூக நிலையமொன்றிலே அங்கத்தவனாக இருந்த செல்வ ந்தன், அந்த சனசமூக நிலையத்தால் மேற்கொள்ளப்படும் சில நன்மை தரும் செயற்திட்டங்களுக்கு தாராளமாக உதவி செய்தான். அதனால் அவன் அந்த ஊர் ஜனங்கள் மத்தியில்; நன்மதிப்பை பெற்றிருந்தான். ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த நிலையத்தினால் மேற்கொள்ள ப்படும் தனக்கு பிடிக்காத செயற்தி ட்டங்களுக்கு மட்டும் உதவி செய் வதை நிறுத்திக் கொண்டான். அது மட்டுமல்லாமல், அப்படியாக செயற் திட்டங்களை தொடர்ந்து செய்தால், தான் இன்னுமொரு ஊருக்கு சென்று விடுவேன் என்று மிரட்டல்களை அவ் வப்;போது மறைமுகமாக கூறிக் கொள்வான். அதாவது, தான் நினை த்த காரியங்களே நடக்க வேண்டும் என்ற நோக்கமும், நான் இல்லாவி ட்டால் இவர்களுக்கு பெரும் இழப்பு என்ற எண்ணமும் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. அந்த சனசமூக நிலையத்தின் வழியாக ஊரின் சேம நலத்திற்காக சேவை செய்வதின் மேன்மையை உணராமல், தன்னிடமிருந்த செல்வத்தால் அந்த நிலை யத்தையும், அதன் செயற்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்தி ருக்கலாம் என்ற பெருமை அவன் சிந்தையை ஆட்கொண்டது. பிரியமா னவர்களே, இன்றை நாட்களிலே இந்த சம்பவத்திற்கு ஒத்ததாகவே, சபை ஐக்கியங்களிலும்; சில மனிதர்கள் உலக ஐசுவரியமுடையவர் களாகவோ, உலக கல்வியறிவுடையவர்களாகவோ அல்லது பற்பல தாலாந்துகள் உடையவர்களாகவோ இருக்கின்றார்கள். தங்களிடம் இரு ப்பது தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள் என்று கூறிக் கொள்ளும் இவர் கள். தேவனுக்கு சேவை செய்வதற்கோ நிபந்தனைகளை முன் வைக்கின்றார்கள். தேவன் கொடுத்த தாலாந்துகளை தங்கள் சுய விரு ப்பங்களை நிறைவேற்றும் கருவிகளாக பயன்படுத்துகின்றார்கள். தன்னு டைய உள்ளத்தை தேவனுக்கு கொடுக்காதவன், அவருக்கு எப்படி பணி செய்வான்? முழு உள்ளத்தோடு அவரை சேவிப்பவர்கள் தங்கள் பணியை ஆனந்த பாக்கியமென்று அறிந்து, எல்லாவற்றையும் மனத்தா ழ்மையோடு செய்வார்கள். தேவ பிள்ளைகளே, பெருமையுள்ளவர்களு க்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் தம்முடைய கிருபையை பொழிகின்றார் என்பதை அறிந்து கொள்ளு ங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கின்ற தேவனே, நீர் எனக்குத் தந்தவைகளை, முழு உள்ளத்தோடு உம்முடைய பணிக்காக பயன்படுத்த ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 17:10