புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2021)

ஜெயமோ கர்த்தரால் வரும்

சங்கீதம் 20:7

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்க ளோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை க்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.


சாமுவேல் என்னும் தேவ ஊழியரின் நாட்களிலே, தேவனாகிய கர்த்த ர்தாமே நியாயாதிபதிகள் வழியாக தம்முடைய ஜனங்களை வழிநடத்தி வந்தார். அந்நாட்களிலே ராஜாக்கள் ஆட்சி செய்யவுமில்லை, பெரிய அரண்மனைகளும் இருந்ததில்லை. ராஜாவிற்கு ஆலோனை கூற மந்திரி சபை இருந்ததில்லை. ராஜாவிற்கு சேவை செய்ய பணிவிடைக்காரரும் இருக்கவில்லை. தேவாதி தேவன் தாமே, தம்முடைய நியாயாதிபதிகள் வழியாக ஜனங்களை நடத்தி வந்தார். அந்த நியாயதிபதிகளுக்கு தேவனே தலைவராகவும், ஆலோசனைக் கார ராகவும் இருந்து வந்தார். ஆனால் தேவ ஜனங்களோ, மற்றய தேசங்க ளிலே இருப்பது போல, தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும் என்று நியாயா திபதியாகிய சாமுவேலிடத்தில் முறை யிட்டார்கள். இந்த கோரிக்கையின் கருப்பொருள் என்ன? தலைமுறை தலைமுறையாக ராஜரீகம் பண்ணுகி றவரும், மிகுந்த கிருபையுள்ளவருமாகிய, தேவன் நியமித்த ஒழுங்கு முறைகளை தள்ளிவிட்டு ஒரு ராஜாவானவர் தங்களை வழிநடத்தி செல்வார் என்ற எண்ணம் அவர்களுக்குள் குடிகொண்டது. தேவ ஆலோ சனையைவிட, ராஜாவினதும் அவன் நியமிக்கும் மந்திரிகளின் ஆலோசனைகளும் தங்களுக்கு பலன் தரும் என்று நினைத்தார்கள். தேவனு டைய பாதுகாப்பைவிட ராஜாவின் படைப்பலம் தங்களுக்கு வெற்றி கொடுக்கும் என்று நினைத்தார்கள். “சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். தங்கள் பெலத்தை குறித்து மேன்மைபாராட்டுகி ன்றவர்கள் முறி ந்து விழுவார்கள். கர்த்தரை நம்பியிருக்கின்றவர்களோ நிமிர்ந்து நிற்பா ர்கள். குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெய மோ கர்த்த ரால் வரும்.” என வேதத்திலே எழுதப்பட்டிருக்கின்றது. எனவே கர்த்தரால் நியமிக்கப்பட்ட ஆளுகையை அசட்டை செய்யாதிருங்கள். கர்த்த ருடைய ஆலோசனையை அற்பமாக எண்ணாதிருங்கள். உங்களுக்கு உண்டான கல்வி, செல்வம், அந்தஸ்துக்களினால் உங்கள் காரியங்கள் வாய்க்கும் என்று அவைகளிலே உங்கள் நம்பிக்கையை வைக்காதிரு ங்கள். கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியு மில்லை, ஆலோசனையுமில்லை. அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாதது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்தின் ஆளுகைக்குள் நான் சிக்கிவிடாதபடிக்கு எப்போதும் உம்முடைய ஆளுகைக்குள் இருந்து உம்முடைய ஆலோசனையின்படி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 சாமுவேல் 8:7