புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2021)

கட்டளைகள் எதற்காக?

உபாகமம் 10:13

நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண் டும் என்பதையே அல்லா மல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்


ஒரு ஆசிரியரியரானவர் தன் வகுப்பிலுள்ள ஒரு மாணவன் படிக்கக்கூ டிய வசதிகள் அவனுக்கிருந்தும், அவன் தன் பாடங்களிலே கவனமற் றிருப்பதைக் கண்டு கொண்டார். அந்த மாணவனை அப்படியே விட்டு விடாமல், அவனுடைய பாடசாலை வேலைகளை கவனமெடுத்து, அவன் தவறுகின்ற வேளைகளிலே அவனுக்கு அறிவுரைகளை கூறி, அவனை அவ்வப்போது கண்டித்துக் கொண்டார். ஆனால் அந்த மாணவ னோ, தன் வகுப்பாசியர் தன்னை கண்டிக்கின்றார் என்று தன் பெற்றோ ரிடம் முறையிட்டான். பெற்றோர் வகு ப்பாசிரியரோடு பேசியபோது, தங்கள் மகனுடைய உண்மை நிலையை அறி ந்து கொண்டார்கள். பெற்றோரும் அந்த ஆசிரியரோடு இணைந்து தங் கள் மகனுடைய காரியத்திலே மிக வும் கவனமுள்ளவர்களாக, வீட்டிலே சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி னார்கள். அந்த சூழ்நிலையானது, அந்த மாணவனுக்கு, அப்போது சற்று கசப்புள்ளதாக இருந்தாலும் சில ஆண்டுகள் சென்றபின்பு, அவன் பெரியவனாகி நல்ல உத்தியோகத்திலே அமர்ந்தான். பாடசாலை நாட்க ளிலே, குறிப்பிட்ட அந்த ஆண்டிலே தன்னுடைய வகுப்பாசிரியரும் தன்னுடைய பெற்றோரும் தன் நிலைமையை ஒழுங்குக்கு கொண்டு வந்திராவிட்டால், தான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன் என் பதை உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, தங்கள் பிள்ளை களை அன்பு செய்யும் பெற்றோர், வீட்டிலே அவர்களுக்கு ஏன் ஒழுங்கு முறைகளை கொடுக்கின்றார்கள். தங்கள் பிள்ளைகள் வாழ்விலே நன் மையை கண்டடைய வேண்டும் என்பதற்காக அல்லவா. நல்ல ஆசிரிய ர்கள் ஏன் மாணவர்களை கண்டித்து நடத்துகின்றார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அப்படி செய்கின்றார்கள். இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அப்படியிருந்தால், நம்முடைய பரலோக பரமபிதா எவ்வளவு அதிகமாக நம் வாழ்வின் நன்மையைக் குறித்து கரிசனையுள்ளவராக இருப்பார் என்பதை சிந்தித் துப்பாருங்கள். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. அதன் வழியில் நடக்கின்றவர்களோ நன்மையை கண்டடைகின்றார்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் பாவ வழிகளிலே அழிந்து போகாதபடிக்கு, பரலோகிலே நித்திய வாழ்வை பெற்றும் கொள்ளும்படி உம்முடைய கற்பனைகளை கைக்கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:11