புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2021)

அளக்கப்படும் அளவு

லூக்கா 6:38

நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.


ஒரு ஸ்தாபனத்தின் இயக்குனர், தன்னுடைய வீட்டிலே திருத்த வேலை களை மிகவும் குறைந்த செலவிலே செய்ய வேண்டும் என்று, திருத்த வேலைகள் செய்ய வந்த மனிதனிடம், அவன் கூறும் விலையைவிட மிகவும் குறைந்த விலைக்கு திருத்த வேலைகளை செய்யும்படி கேட்டுக் கொண்டான். நாள் கூலிக்கு வேலை செய்யும் அந்த மனிதன், இந்த வேலையைவிட்டால், எனக்கு இன்று படி இருக்காது, குடும்பம் பட்டினி இருக்க நேரிடும் என்று அந்த திரு த்த வேலையை மிகவும் குறைந்த பணத்திற்கு செய்து கொடுத்தான். அந்த இயக்குனர், தன் நிலையை நியாயப்படுத்தும்படி திருத்த வேலை க்கு நான் கொடுக்கும் பணம், திரு த்துபவர் செய்யும் வேலைக்கு ஏற்ற தாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனாலும் தான் வேலை செய்யும் ஸ்தாபனத்திலோ தனக்கு கிடைக்கும் சம்பளமும் சலுகையும் எப்போதும் அதிகமாக இருக்க வேண்டுமென்பதை விரும்பினான். தான் செய்யும் வேலைக்கு ஏற்றதாக சம்பளம் கொடுங்கள் என்று அவன் ஒரு போதும் தன் ஸ்தாபனத்தின் அதிபரிடம் கூறுவதில்லை. இவ்வண்ண மாகவே, சில மனிதர்கள் “தங்களுக்கு ஒரு நியாயத்தையும் மற்றவர்க ளுக்கு இன்னுமொரு நியாயத்தையும் வைத்திருக்கின்றார்கள்”. இவ்வண் ணமாகவே, என் மகன் குற்றம் செய்தால், அது உலகத்திற்கு தெரியக் கூடாது. மற்றவர்கள் மத்தியிலே அவன் அவமானப்படக் கூடாது. அதை இரகசியமாக கையாள வேண்டும். தேவன் அதை கருணையாய் மன்னி த்துவிட வேண்டும் என்று கூறுகின்ற சிலர், இன்னுமொருவருடைய மகன் குற்றம் செய்தால், அதை பகிரங்கமாக்கி, அவனை அவமானப்படுத்தி விடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் சுயநலமுள்ளவர்கள். பிரியமான வர்களே, நாம் சுய நீதியின்படி வாழக் கூடாது. உலகத்திலே ஒரு நீதி உண்டு அதுவும் குறைவுள்ளது. ஆனால் தேவ நீதியோ எப்போதும் நிலைநிற்கும் என்பதை மறந்துவிடாதிருங்கள். “மனு~ர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்க ளும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” “நீங்கள் எந்த அளவினால் அளக் கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். வெவ்வேறான நிறைக்க ற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல. உங்கள் நிறைகற்கள் கர்;த்தருடைய பார்வையிலே நியாமுள்ளவைக ளாக இருப்பதாக.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் என் சுயநீதிக்கும், இந்த உலகத்தின் நீதிக்கும் விலகி, தேவ நீதியை என் வாழ்வில் நிறைவேற்றுபவனாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 20:23