புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2021)

தெய்வீக சுபாவமுள்ளவர்கள் யார்?

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போ காமல் எல்லாரும் மனந் திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


அந்த மனிதன் உங்களுக்கு செய்தது தவறு என்று எல்லோருக்கும் தெரியும். அதை நீங்களும் அறிந்திருந்தும் ஏன் அவருடைய குற்றத்தை அவருக்கு உணர்த்தாமல் அவரோடு சாந்தமாய் பேசினீர்கள் என்று ஒரு வாலிபன் தன் பாட்டனாரிடம் கேட்டான். அதற்கு அவன் பாட்டனார்: மகனே, மதுபோதையினாலே வெறி கொண்டிருக்கும் மனிதனொரு வ னுக்கு நீ எவ்வளவு அறிவுரை கூறி னாலும் அது அவனுக்குள்ளே போகாது. அவனால் அதை நிதானமாக கிரகித்து அறிய முடியாது. அது போல, மனிதர் கள் தமது வாழ்வில் மூர்க்கவெறி கொள் வதுண்டு. அந்த வேளையிலே மனிதர் கள் மனதிலே காரிருள் சூழ்ந்திருப்ப தால் அவர்களால் நிதானமாக சிந்தி க்க முடியாது. அவர்களுக்கு தாங்கள் செய்வது மட்டுமே சரியென்றும், மற்ற வர்கள் எல்லோருமே பிழை என்றும் தோன்றுகின்ற வேளையிலே எங்களால் அவர்களுக்கு நீதியையும் நியாய த்தையும் கற்றுக் கொடுக்க முடியாது. அதுபோலவே எனக்கு தீங்கு செய்த அந்த மனிதனுடைய நிலையும் தற்போது இருக்கின்றது. அவன் புத்தி தெளிகின்ற வேளையிலே அவன் தன்னுடைய குற்றத்தை உண ர்ந்து கொள்வான். அந்த வேளையிலே அவனோடு நீதி நியாயங்களை பேசிக் கொள்ளலாம். அந்த மனிதன் நடந்து கொண்டது போல நானும் முன்பு நடந்து கொண்டிருந்த நாட்களுமுண்டு என்று தன் பேரனுக்கு அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, நாம் நம்முடைய வாழ் விலே எத்தனை முறை தவறியிருக்கின்றோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அந்த வேளைகளிலே நமக்கு அறிவுரைகூறுபவர்களின் ஆலோசனையை உடனடியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதான நிலையில் நாம் இருந்தோமா? அல்லது அந்த வேளைகளிலே தேவ ஆலோசனை யின் வழியில் நடக்க நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்தோமா? நாட்கள் கடந்து சென்ற பின், நம்முடைய உண்மை நிலையை நாம் அறிந்த போது, மனம் வருந்தினோம்? நாம் உணர்வடைந்து புத்தி தெளியும் வரை எத்தனையோ நாட்களாய் அன்புள்ள ஆண்டவராகிய இயேசு நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து வந்தார். தெய்வீக சுபாவங்கள் நம்மில் இருந்தால், இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் நீடிய பொறுமையாய் இருப்பது போல நாமும், நமக்கெதிராக குற்றம் செய்பவர்களுக்கு இரக்கத்தை காண்பிப்போமாக.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, எத்தனையோ தடவைகள் என்னுடைய மனதை கடினப்படுத்திய போதிலும், நீர் தயவாய் மன்னித்தது போல நானும் மற்றவர்களை மன்னிக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:10