புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2021)

பிதாவின் சித்தம் நிறைவேறட்டும்

லூக்கா 22:42

என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது


உங்கள் வாழ்க்கையிலே சில தெரிவுகள் உங்களுக்கு கொடுக்கப்பட் டால் எதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்பதைக் குறித்து ஆராய் ந்து பாருங்கள். 1. ஐசுவரியமுள்ளவர்களாக விலையேறப்பெற்ற வஸ்தி ரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்வது, அல்லது கர்த்தரு க்கு சித்தமானால், அவர் நாமத்தின் நிமித்தம் இந்த உலகிலே எளிமை யாக வாழ்வது 2. சுகமாய் பல ஆண்டுகள் வாழ்வது, அல்லது கர்த் தருக்கு சித்தமானால், அவர் நாமத் தின் நிமித்தம் பாடுகளையும் உபத்தி ரவங்களையும் சகித்து இரத்தசாட்சி யாக மரித்து, நித்திய மகிமையிலே பங்கடைவது. 3. திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, பேரப்பிள்ளைகளைக் கண்டு மரிப்பது அல்லது கர்த்தருக்கு சித்தமானால் தனியனாக வாழ்வது. அதாவது ஐசுவரியமுள் ளவர்களாய், சுகமாய்;, குடும்பமாக பல ஆண்டுகள் வாழ்வது மட்டுமே கர்த்தருடைய ஆசீர்வாதம் என்று சில மனிதர்கள் கருதுகின் றார்கள். தானியேல், பவுல் போன்ற தேவ பிள்ளைகள், பல சவால்கள் மத்தி யிலே தனியாக வாழ்ந்து தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றினா ர்கள். ஸ்தேவான் என்னும் வாலிபன் தன் இளம் வயதிலேயே இரத்த சாட்சியாக மரித்தான். அவன் மட்டுமல்ல அந்நாட்களிலே அநேகர் அப்ப டியாக உபத்திரவத்திலும், வியாகுலத்திலும், துன்பத்திலும், பசியிலும், நிர்வாணத்தினாலும், நாசமோசத்திலும், பட்டயத்திலும் தேவ சேவை செய்து மரித்தார்கள். “என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்ப ண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லை யா?” என்று பரிசுத்த வேதாகமத்திலே கூறப்பட்டிருக்கின்றது. கர்;த்த ருக் குசித்தமானால் நீங்கள் கல்வி, ஐசுவரியம், அந்தஸ்துக்களுடன் செழி ப்பாக வாழ்ந்து, பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தத்தை உங் கள் வாழ்வில் நிறைவேற்றுங்கள். ஒருவேளை நீங்கள் தரித்தரராகவே இரு ந்தால், ஐசுவரியத்தைக் குறித்து கவலையடையாமல் பிதாவாகிய தேவ னுடைய திருச்சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுங்கள். எனினும் ஐசுவரியவானாக வாழ்ந்து விசுவாசத்தைவிட்டு வழுவிப்போய் விடா மல், கர்த்தருக்கு சித்த மானால் தரித்திரனாக வாழ்ந்து பரலோகம் செல் வதே நன்மையானது. எனவே ஆண்டவர் இயேசுவைப் போல பிதாவின் சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவைப் போல, நான் எந்த சூழ்நிலையிலும் மனரம்மியமாக இருந்து உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21