புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2021)

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயம்

ஏசாயா 55:6

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்;


ஒரு மனிதனானவன் மரணத்திற்கேதுவான வியாதி கொண்டவனாயிரு ந்தான். அவன் இந்த பூமியை விட்டுப் போக வேண்டிய நாட்கள் நெரு ங்கின வேளையிலே, அவனுக்கு ஆண்டவராகிய இயேசுவை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிருபையாகக் கொடுக்கப்பட்டது. அதாவது, அவன் இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றாலும், பரலோகத்திலே முடிவி ல்லா வாழ்வை பெற்றுக் கொள்ளும் ஒரே வழியாக மீட்பராகிய இயேசு கிறி ஸ்து இருக்கின்றார் என்ற மீட்பின் நற் செய்தி அவனுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலே அவனுக்கு இருக் கும் தெரிவுகள் என்ன? 1. ஆண்டவ ராகிய இயேசுவை தன் சொந்த இரட் சராக ஏற்றுக் கொண்டு, ஆன்மீக மீட்பை பெற்று பரலோகிலே முடிவி ல்லா வாழ்வை பெற்றுக் கொள்ளலாம் 2. ஆண்டவராகிய இயேசு வழி யாக உண்டாகும் ஆன்மீக மீட்பை ஏற்றுக் கொள்ளாமல் நித்திய மரண த்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கலாம். ஆனால் அவனோ, “இயேசு ஆண்டவராக இருந்தால் என்னை குணமாக்கட்டும், அப்போது அவரை நம்புவேன், அல்லது நான் நம்பமாட்டேன்” என்று தன் மனதை கடி னப்படுத்திக் கொண்டான். அவன் தான் சென்றடையும் இடத்தை தானே நிர்ணயம் செய்து கொண்டான். இவ்வண்ணமாகவே, ஆண்டவராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் போது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இர ண்டு குற்றவாளிகள் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டா ர்கள். ஆண்டவராகிய இயேசுவோ, அந்த குற்றவாளிகளுடைய பாவங்க ளையும், மனிதகுலம் முழுவதின் பாவத்திற்குரிய பரிகாரத்திற்காகவும் தம்மை பலியாக ஒப்புக் கொடுத்து சிலுவையில் அறையப்பட்டிருந்தார். ஆனால் அந்த குற்றவாளிகளோ அவர்கள் நியாயப்படி தண்டிக்கப்பட் டிருந்தார்கள். அவர்கள் இருவரும் மரணத் தறுவாயில் ஆண்டவராகிய இயேசுவை அறியும் அரிய சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்க ளையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். அப்படி அவரை இகழ்ந்து, தன் மனதை கடினப்படுத்தி, தான் சென்றடையும் இடத்தின் முடிவை அவன் தானே உறுதி செய்து கொண்டான். மற்றவனோ, இரட் சிப்பை பெற்றுக் கொண்டான். பிரியமானவர்களே, பாவத்திலிருந்து மன ந்திரும்பும்படி கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படு த்திக் கொள்ளுங்கள். கர்த்தர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஜெபம்:

என் வாழ்நாட்களை அறிந்த தேவனே, இந்த பூமியிலே நான் வாழும் நாட்களில், உம்மைக் கிட்டிச் சேர கிடைக்கும் சந்தர்ப்பங்களை அலட்சியம் பண்ணிவிடாதபடிக்கு என் மனக்கண்களை பிரகாசமுள்ளதா க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:35-39