புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2021)

என் தேவையை அறிந்த தேவன்

மத்தேயு 6:8

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள் ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவனுக்கு, செழிப்புள்ள தூர தேசத்திற்கு சென்று வேலை செய்யும்படியாக, அதற்குரிய ஆயத்தங் களை செய்யும்படிக்கு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை சேர்ந்த நிர்வாகிகள் அவனை அழைத்திருந்தார்கள். வெளிநாட்டிற்கு செல்வதற்குரிய ஆயத் தங்களை செய்வதற்கு பணம் தேவை, அநேக பொருட்களை வாங்க வேண்டும், விமான அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குழ ப்பமுடையவனாக இருந்தான். அந்த ஸ்தாபனத்தின் நிர்வாகி அவனை நோ க்கி: நீ ஏன் மிகவும் குழப்பமடைந்தி ருக்கின்றாய். உன் பிரயாணத்திற்குரிய ஆயத்தங்கள் யாவையும் நாங்கள் செய்திருக்கின்றோம். அங்கு உனக்கு தேவையாதெல்லாம் கொடுக்கப்படும். தற்போது அமைதலாக இருந்து, நாட்டின் சட்ட விரோதமான நடவடிக் கைகளிலே நீ சிக்கிக் கொள்ளாதபடிக்கு உன்னைக் காத்துக் கொள் என்று கூறினார். அந்த வாலிபன் மிகவும் சந்தோ~த்தோடே அதை ஏற்றுக் கொண்டு, அவனுடைய பிரயாண நாள் மட்டும் மிகவும் ஜாக்கிரதையுள்ளவனாக வாழ்ந்து வந்தான். பிரியமானவர்களே, பரம தேசத்திற்கு செல்லும் அழைப்பை பெற்ற நமக்கு இந்த உலகிலே தேவைகள் உண்டு. நம்முடைய பரமபிதாவை நோக்கி நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என் பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்ப டாதிருங்கள். அதாவது, எல்லாவற்றையும் தேவனாகிய கர்த்தர் பார் த்துக் கொள்வார் என்று நாம் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது. ஆனால் அவைகளே என் வாழ்வு, அவைகளே என் தேவை என்று அதற்காகவும் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்துவிடக்கூடாது. இவைகளையெல்லாம் தேவ ஞானம் இல்லாதவர்கள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திரு க்கிறார். நாம் சென்றடைய வேண்டிய இடம் ஒன்று உண்டு. அது தேவனுடைய ராஜ்யம். நாம் உயிர் வாழும்வரை, அந்த ராஜ்யத்திற்கு ரியவைகளை நாடித் தேட வேண்டும். இந்த உலகத்தின் காரியங்களால் அந்த பிரயாணம் தடை படாதபடிக்கு நாம் எப்போதும் விழிப்புள்ளவர் களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் தேவை என்ன என்று அறிந்த தேவனே, இந்த உலகத்தின் ஆசைக்குள் நான் சிக்கி, நான் பெற்ற உன்னத அழைப்பை மறந்துவிடா தபடிக்கு, உணர்வுள்ள ஜீவியம் ஜீவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33