புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2021)

பொருளாதார நெருக்கடி

நீதிமொழிகள் 21:6

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும்.


தேசத்திலே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்ததால், மாதாந்தர ஊதியம் பெற்று வந்த ஒரு தகப்பனானவர், தன் வேலையை இழந்து போனார். பல இடங்களிலே வேலைக்காக விண்ணப்பித்திருந்தும், எல்லா கதவுகளும் அவருக்கு அடைபட்டிருந்தது. சில மாதங்கள் கடந்து சென்றதால் அவர் குடும்பம் பல கஷ்டங்களுக்கூடாகச் சென்று கொண்டிருந்தது. அந்த வேளை யிலே அவருடைய நிலையைக் கண்ட அயல்வாசி ஒருவன், நீ இந்த விண்ணப்பப்படிவத்தை நிர ப்பி, அரச இலாகாவிற்கு அனுப்பினால் உனக்கு அவர்கள் மாத ந்தோறும் பணம் கொடுப்பார்கள் என்று கூறினான். அந்த விண்ணப்ப பத்திரத்தை பார்த்த அந்த தகப்பனானவர், இதில் கூறப்பட்ட நிபந்தனைகளின்படி நான் இந்த சலுகைக்கு தகுதியுடையவனில்லை என்று கூறினார். அதெல்லாம் ஒன்றுமில்லை, பணத்தை பெறுவதற்கு தகுதிபெறும்படி நீ அந்த விண்ண ப்பப்படிவத்தை அதற்கேற்ற பிரகாரம் மாற்றிவிடு என்று கூறினான். அதற்கு அந்த தகப்பனானவர்: நான் பொய்யான தகவல்களை போட்டு, பணத்தைப் பெற்று, உயிர்வாழ்வதைவிட, பட்டினியாய் இருந்து மரித்து நித்திய வாழ்வை அடைவதே எனக்கு மேலானது என்றார். அதற்கு அந்த அயல்வாசி: இந்த உலகத்திலே உனக்கு பிழைக்கத் தெரியாது என்று கூறி சென்றுவிட்டான். நீதிமானின் கைகள் சுத்தமுள்ளவைகள். அங்கே அநியாயமான ஆதாயத்திற்கு இடமில்லை. உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர்கள் சுதந்தரம் என்றென் றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். சில மனிதர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக பொய்களைக் கூறி, தங்கள் ஆத்துமாக்களைக் கெடுத்துக் கொள்கின்றார்கள். பிரியமானர்களே, வேலைக்காரரின் கண் கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போல, நீதிமா னின் கண்களும் அவர்களுடைய பரலோக எஜமானனாகிய தேவனா கிய கர்த்தரையே நோக்கி இருக்கின்றது போல, உங்கள் நாட்களை அறிந்த தேவனையே நம்பியிருங்கள். அநியாயமான வழிகளுக்கு உடன் படாதிருங்கள். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயி ருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்தி ருக்கிறது. கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பவர் தேவனே.

ஜெபம்:

உத்தமர்களின் நாட்களை அறிந்த தேவனே, இந்த உலகத்தின் அற்பமான காரியங்களுக்காக, உம்முடைய நீதியைவிட்டு விலகிச் செல்லாதபடிக்கு, உம்மையே பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:27