புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2021)

வாழ்க்கையின் குறிக்கோள்

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது, தங்கள் தேவை எது, ஆசை எது, விருப்பம் எது என்பதை குறித்து சிந்திப்பதில்லை. அவர் கள் கண்கள் காண்பதெல்லாம் அவர்களுக்குத் தேவை என்றே எண்ணிக் கொள்வார்கள். மனிதனுடைய மனதிலே தோன்றுகின்ற ஆசைகள் எல்லாம் அவனுடைய தேவைகள் அல்ல. ஆனால் உலக போக்கிலே வாழ்பவர்கள், அந்த ஆசைகளு க்கு வேறு பெயரை சூட்டி அதை பின்தொடர்கின்றார்கள். அதாவது, “நான் பெரிய சொத்துக் காரனாக, ஐசுவரியவானாக வரவேண்டும்” என்பதை பொருள் ஆசை, பண ஆசை என்று கூறாமல், அது என் னுடைய வாழ்கையின் கனவு, திட்டம், குறிக்கோள் என்று அதை பின்தொடருகின்றார்கள். பின்தொடருகிறவர்களில்; சிலர் அதைக் கண்ட டைகின்றார்கள். அவைகளின் முடிவு என்ன? இஸ்ரவேலின் ராஜாக்க ளில் சாலமோன் என்னும் ராஜா ஐசுவரியவானும், ஞானியுமாக இருந் தார். அவர் தன் வாழ்வைக் குறித்து கூறியதாவது: “எனக்குமுன் எருச லேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், பெரியவனும் திரவிய சம்பன்ன னும், ஞானியுமாக இருந்த சாலமோன் தன் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் தன் கண்களுக்குத் தடைபண்ணவில்லை. அவர் இருதயத் துக்கு ஒரு சந்தோ~த்தையும் அவர் வேண்டாமென்று விலக்கவில்லை” என்று தன் வாழ்க்கையின் அனுபவத்தை கூறியிருக்கின்றார். பின்பு அதன் முடிவு என்னவென்பதையும் கூறியிருக்கின்றார். அதவாது, “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத் தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனது க்குச் சஞ்சலமுமாயிருந்தது. சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.” என்றார். அப்படியானால் மனிதனுடைய குறிக்கோள் என்ன? காரியத் தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்;ளுவதே எல்லா மனு~ர்மேலும் விழுந்த கடமை இதுவே. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவன த்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலு ண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலக மும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;. அவைகளினாலே மனிதனுடைய மனம் ஒருபோதும் திருப்தியாவதில்லை. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். தேவ சித்தத்தை நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.

ஜெபம்:

முடிவில்லா வாழ்வை பெறும்படி என்னை அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ்வதன் பாக்கியத்தை உணர்ந்து கொள்ளும்படி உலகத்தினால் உண்டான இச்சைகளுக்கு தப்பி வாழ கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 2:1-11