புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2021)

எல்லாத் தீமையினின்றும் இரட்சிப்பார்

2 தீமோத்தேயு 4:18

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்;.


“என்னுடைய எதிரிகள் எனக்கு எதிர்த்து நிற்பார்கள் என்பதைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் நான் அநேக ஆண்டுகளாக நம்பியிருந்த என் உடன் சகோதரர்கள் எனக்கேற்பட்ட உபத்திரவத்திலே எனக்கு மோசம் செய்துவிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.” என்று தேவனை அறிந்த மனிதனொருவன் தன் போதகரிடம் தன் மனவேதனையை தெரியப்படுத்தினான். இப்படிப் பட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை என்று நாம் கூறுவோமாக இரு ந்தால் நாம் பொய்யர்களாக மாறி விடுவோம். ரோமருடைய ஆட்சிக் காலத்திலே, கிறிஸ்துவின் நற்செய் தியை அறிவித்தவர்கள் வெகுவாய் உபத்திரவப்படுத்தப்பட்டார்கள். தேவ ஊழியராகிய பவுல் அவர்களில் ஒருவராக இருந்தார். ஒரு சமயம், ரோம அதிகாரிகளுக்கு உத்தரவு சொல்லும்படி பவுல் நிற்கையில், ஒருவனும் அவருக்கு உதவியாக நிற்கவில்லை. அதிகாரங்களுக்கு பயந்திருந்ததால் எல்லாரும் அவரை கைவிட்டார்கள். ஆனால் தேவ ஊழியராகிய பவுல், அந்த குற்றம் தன்னை கைவிட்டவர்கள் மேல் சுமராதபடிக்கு தேவனை வேண்டிக் கொண்டார். கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறத ற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன் என்று தன்னுடைய சாட்சியை கூறினார். (2 தீமோ 4:16-18). உங்கள் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்ப டலாம். அப்படி ஏற்படும்போது, அது மிகவும் மனவேதனையாய் இருக் கும். அந்த வேளையில், சிலுவையிலே தொங்கிய நம்முடைய ஆண் டவராகிய இயேசுவை கண்முன் கொண்டு வாருங்கள். அவர் தேற்று வார் யாருமின்றி பல பாடுகள் மத்தியிலும் எவரையுமே கடிந்து கொள் ளவில்லை. அதுபோலவே மனவேதனையான நேரங்களிலும் சகோதரர்களைக் குறித்த கசப்பை மனதில் வளர இடங்கொடுக்காதிருங்கள். ஆண் டவராகிய இயேசுவை போல மாறும்படிக்கே நாம் அழைக்கப்பட்டிருக்கி ன்றோம். இப்படிப்பட்ட பாடுகளை நமக்கு முன்பாக இருந்த, முன்னோ ர்கள் கிறிஸ்துவுக்காக சகித்துக் கொண்டார்கள். அவர்களுடனே இருந்த கர்த்தர் நம்மோடும் இருக்கின்றார். கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுகளை சகிப்போமாக.

ஜெபம்:

ஒரு போதும் கைவிடாத தேவனே, மனிதர்களால் கைவிடப்பட்ட சூழ்நிலைகள் உண்டானாலும், என் இருதயத்திலே கசப்பை வளர்க்காமல், இயேசுவைப் போல யாவருக்காகவும் விண்ணப்பம் செய்யும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:17