புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 12, 2021)

இயேசுவை அறிந்தவன் யார்?

யோவான் 15:12

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.


“நான் இயேசுவை நேசிக்கின்றேன், அவரை நம்புகின்றேன் ஆனால் சபை ஐக்கியத்திலுள்ளவர்களை எனக்குப் பிடிக்காது” என்று சில மனிதர் கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இத்தகைய அறிக்கை கேட்ப தற்கு சரியானது போல தோன்றலாம் ஆனால் இவர்கள் ஆண்டவரா கிய இயேசுவை அறிய வேண்டிய பிரகாரமாக இன்னும் அறியவி ல்லை என்பதே பொருளாகும். ஒரு வன் ஆண்டவராகிய இயேசுவினிடத் தில் அன்பு கூருகின்றான் என்பது எதினால் விளங்கும்? “நீங்கள்; என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந் தால், என்னுடைய அன்பிலே நிலை த்திருப்பீர்கள். நான் உங்களில் அன் பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒரு வரிலொருவர் அன்பாயிருக்கவேண்டு மென்பதே என்னுடைய கற்பனையா யிருக்கிறது.” என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். (யோவான் 15:10,12). தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகை த்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராம லிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். (1 யோவான் 4:20-21). உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனி டத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜ ரீகப் பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். (யாக்கோபு 2:8). சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயா வது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது, வேதப்புரட்டனாயாவது இருந்தால் அவனைவிட்டு விலகி இருக்க வேண்டும். (1 கொரி 5:11, தீத்து 3:10). அப்படிப்பட்டவனுடைய கிரியை களுக்கு நாம் உடன்பட்டவர்கள் அல்லர். ஆனால் அப்படிப்பட்டவ னையும் நாம் வெறுத்து தள்ளிவிடக்கூடாது. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு 5:19-20).

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நான் நிர்மூலமாகாதிருப்பது உம்முடைய கிருபை என்பதை உணர்ந்தவனா(ளா)ய், மற்றய சகோதர சகோதரிகளின் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:10