தியானம் (வைகாசி 11, 2021)
நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்
2 கொரிந்தியர் 13:5
உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்.
வீட்டிலே, தாய் தந்தையருக்கு பிரியமான ஒரு பிள்ளையாக இருந்து வந்த சிறு பையன் ஒருவன், பாலர் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. அவன் பாடசாலைக்குச் சென்ற நாள்முதல், பாடசாலை யின் வகுப்பாசிரியர் அவனைக் குறித்த சில முறைப்பாடுகளை பெற் றோரிடம் கூறினார். பெற்றோருக்கு அதை நம்ப முடியவில்லை. இவன் அருமையான பிள்ளை, வீட்டிலே எந்தவிதமான பிரச்சனைகளையும் கொடுப்பதில்லை. இவனல்ல, வகு ப்பாசிரியரும் மற்றய மாணவர்க ளுமே இவனைக் குழப்புகின்றார்கள் என்று பெற்றோர் சற்று கோபமடை ந்தார்கள். அந்த சிறு பையனின் பாட்டானார் பெற்றோரை நோக்கி: இவன் நல்ல பிள்ளைதான் ஆனால் இந்த வீட்டிலே அவன் தனிப்பிள் ளையாக இருப்பதனால் அநேகமான காரியங்கள் அவனுடைய இ~;ட ப்படி நடக்கின்றது. எங்களுக்கு இவன் செல்லப்பிள்ளையாக இருப்ப தால், இவனோடு செல்லமாக பேசி வருகின்றோம். பாடசாலைக்கு செல் லும் போது, இவன் இன்னுமொரு அதிகாரத்திற்கு உட்பட்டவனாக இரு க்கின்றான். மற்றய மாணவர்கள் சரியாக அல்லது பிழையாக இருக் கலாம் ஆனால் இவனுடைய இ~;டப்படி காரியங்கள் நடைபெறப் போவ தில்லை. முதலாவதாக பெற்றோராகிய நீங்கள் இந்த அறிவிலே வளர வேண்டும். பின்பு, உங்கள் மகனையும் அந்த அறிவிலே வளரும்படி இடங்கொடுக்க வேண்டும். ஒரு பிள்ளையானவன், பலரோடு சேரும் போதுதான், சூழ்நிலைகள் வழியாக அவனுடைய சுபாவங்கள் என்ன என்பதை அறிந்து அதன்படி நாங்கள் நற்பண்புகளை அவனுக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, நாமும் சபை ஐக்கியத்திலே இணைந்து கொள்ளும் போது, வேத வார் த்தைகளின் வெளிச்சத்திலே, நாம் யார் என்பதை, நாமே அறிந்து கொள் வோம். வீட்டிலே நடக்கும் காரியங்களை மையமாக வைத்து, நாம் அன்பு நிறைந்தவர்கள், ஒற்றுமையானவர்கள், கீழ்படிவுள்ளவர்கள் என்று சிலர் தங்களை குறித்து கருதிக் கொள்ளலாம். ஆனால் நாம் பிறனை அன்பு செய்கின்றோமா? மற்றவர்களோடு ஒற்றுமையாக இருக்கின் றோமா? அதிகாரங்களுக்கு கீழ்படிய ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின் றோமா என்பதை சபை ஐக்கியத்தின் சூழ்நிலைகள் நமக்கு வெளிப்ப டுத்தும்;. கிறிஸ்து எனக்குள் வாசமாயிருக்கின்றாரா? அப்படி அவர் எனக் குள் இருந்தால், அவருடைய சுபாவங்கள் என்னில் வெளிப்படுகின்றதா? என் பதைக் குறித்து நீங்களே உங்களை சோதித்து அறியுங்கள்.
ஜெபம்:
என் உள்ளத்தின் நினைவுகளை அறிந்த தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நான் என்னை நிதானித்தறிந்து உமக்கு பிரியமான வழியிலே நடக்க கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - புலம்பல் 3:40