புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2021)

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு

சங்கீதம் 37:8

பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.


“யாரையும் குறித்து பேசு ஆனால் என் தாயை குறித்து மட்டும் ஏதாவது பேசுவாயாக இருந்தால், நான் யார் என்பதை அறிந்து கொள்வாய்” என்று தங்கள் சுய கொள்கைகளை கூறும் மனிதர்களை குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்த உலகிலே, இத்தகைய வார்த்தைகளை கூறும் போது, இது தாய்ப்பாசம்! அவன் யார் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை என்று பலர் கரகோசத்தோடு தங்கள் பாரட்டுக்களை வெளிப்படுத்துவார்கள். இன்று, தேவ சாயலடையும்படி அழைப்பைப் பெற்ற சில தேவபிள்ளைகள் கூட, எல்லாவற் றையும் தேவனை அறிகின்ற அறிவில் வளரும்படிக்கு விட்டுவிட்டாலும், வாழ் க்கையின் ஏதோ ஒரு பகுதியில் இத்தகைய சில சுயகொள்கைளை தங்களுக்கென்றுவைத்துக் கொள்கின் றார்கள். இவ்வண்ணமாக சுயகொள்கைகளை அறிக்கை செய்யும் தேவ பிள்ளைகள் தங்கள் பெலவீனமான பகுதியை பொல்லாங்கனாகிய பிசாசானவனுக்கு தெரியப்படுத்துகின்றார்கள். அந்த பெலவீனமான பகுதி யிலே, சோதனை வரும் போது, அவர்கள் வேத வார்த்தையை பின்பற்றாதபடிக்கு அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள் அவர்கள் மனக் கண்களை இருளடையச் செய்து விடுகின்றது. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். அதாவது, இந்த உலகிலுள்ள மனிதர்கள் நமக்கு சொற்களால் மனவேதனைகளை உண்டாக்கலாம் அல்லது செயலால் நமக்கு கோப மூட்டலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளே நமக்கு துன்பமான சூழ்நிலை கள் நம்முடைய தேவபக்தி எவ்வளவு உறுதியானது என்பதை இவ் வாறான சூழ்நிலைகளே பரீட்சை பார்க்கும். ஒரு மனிதன் நம்மை குற்ற ப்படுத்தும்படிக்கு ஒரு வார்த்தையை கூறினால், அவன் நம் வாழ்க்கையை குறித்து கூறிய வார்த்தையில் ஏதாவது உண்மை இருக்கி ன்றதா என்பதை வேத வார்த்தைகளின் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்து பாரக்க வேண்டும். குற்றமிருக்குமாயின், “அதை கூறுவதற்கு அவன் யார்? அவன் செய்யாததையா நான் செய்து விட்டேன்” என்று கூறாமல், வேத வார்த்தைகளின்படி அதை நாம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மனிதன் கூறியவற்றில் உண்மையில்லையென்றால், தேவனுக்கு முன் பாக நாம் குற்றமற்றவர்களாக இருப்போம். அந்த மனிதன் கோள் கூறி சண்டையை பிணைக்கின்றவனாக இருந்தால் அவன் தன்னுடைய விழுகைக் கென்றே அதை நடப்பிக்கின்றான். அவன் மனந்திரும்பாத பட்சத்தில் அதன் பின்விளைவை அவனே அறுவடை செய்வான்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, என் சொந்த கொள்கைகளுக்கு இடங்கொடாமல், தீமையை நன்மையினாலே வெல்லும்படிக்கு, ஞானமுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:19