புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2021)

ஆவிக்குரிய வளர்ச்சியின் முடிவு

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;


பாடசாலையில் படிக்கின்றவர்கள் பன்னிரண்டாம் வகுப்புடன் உயர்தர படிப்பை முடித்து, பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றார்கள். அங்கே குறிப்பிட்ட ஆண்டுகளுடன் தங்கள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். கர்த்தருக்குள் புது சிருஷ்டியாக மறுபடியும் பிறந்த நாம், எத் தனை ஆண்டுகளாக நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டும்? மனிதனுடைய வாழ்நாட்களிலே தேவ சாயலிலே மறுரூபமாவற்கு ஒரு எல்லை உண்டோ? அதாவது “இப் படிப்பட்ட விரதங்களை குறிப்பிடப்ப ட்ட ஆண்டுகளுக்கு செய்தால் நாம் புனிதராகிவிடலாம்” “இந்த புனித ஸ்தலத்திற்கு சென்று வந்தால் போதும், நாம் மோட்சம் சென்றுவிடலாம்” என்று சில மனிதர்கள் கூறிக் கொள்வார்கள். ஒரு மனிதனானவன் தன் வாழ்க்கைவட்டத்திலே குழந்தைப் பருவம், சிறு பிராயம், வாலிப நாட்கள், பெரியவர்களாகுதல், வயோதிபம் போன்ற கட்டங்களை தன் வாழ்விலே ஒருமுறை மட்டுமே கடந்து செல்கின்றான். அதாவது ஒருவனுக்கு வாலிப நாட்கள் வசந்தமாக இருக்கலாம். அந்நா ட்களிலே அவனுக்கு பல அபிலாஷைகளும், திட்டங்களும் இருக்கும். அவன் பெரியவனாகும் போது அந்த பருவம் அவனை எப்படி சந்திக் கும் என்பதைக் குறித்த நிச்சயம் என்ன? வயோதிபம் எப்படியாக அவ னைப் பற்றிக் கொள்ளும் என்ற முன்னனுபவம் அவனுக்கில்லை. மரணம் எப்படியாக அவனை சந்திக்கும் என்று அவனுக்குத் தெரியாது. எனவே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு நாட்களிலும் தேவனுடைய வழிடத்துதல் நமக்கு இன்றியமையாதது. நாற்பது ஆண்டுகளாக வேதத்தை வாசித்தேன், அனுதின மும் ஜெபித்து வந்தேன், தற்போது எனக்கு எழுபது வயதாகிவிட்டது, இனி எனக்கு அவைகள் தேவையில்லை என்று ஒரு மனிதன் கூறிக் கொள்ள முடியுமோ? அவன் அப்படி விட்டுவிடுவானானால், வஞ்சிக்கும் பிசாசானவன் அவன் வாழ்க்கையை இலகுவாக மேற்கொண்டு விடு வான். பிரியமானவர்களே, நாம் யாராக இருந்தாலும், நாளைய நாள் நம்மை எப்படி சந்திக்கும் என்கின்ற நிச்சயம் நமக்கு இல்லை. எனவே காலத்தை அறிந்த கர்த்தரோடுள்ள உறவிலே நாம் எப்பொழுதும் வள ர்ந்து பெருக வேண்டும். அவருடைய திருவசனமே நம்முடைய வாழ் வின் தீபமாக இருக்கின்றது. அந்த தீபத்தை நாம் ஒரு கணம்கூட அணை த்துப் போடக்கூடாது. எல்லா பருவங்களிலும், தெளிந்த புத்தியுள்ளவர் களாக விழித்திருந்து, தேவ சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

ஒரு போதும் கைவிடாத தேவனே, நாளைய நாள் எப்படியாக என்னை சந்திக்கும் என்பதை அறிந்தவரே, உம் வார்த்தையை தினமும் தியானம் செய்து தெளிந்த புத்தியுள்ளவனா(ளா)க இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:3