புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2021)

நிறைவான வளர்ச்சி

எபேசியர் 4:11

கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,


இரண்டு இளைஞர்களுக்கிடையிலே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், தர்க்கமாக மாறி சண்டை செய்யும் அளவிற்கு போய்விட்டது. அந்த வேளையிலே, “நீ இன்னாருடைய மகன் அல்லவா? நீ ஆண் சிங்கம் அல்லவா? நீ யார் என்பதை அவர்களுக்கு காட்டு” என்று அந்த இளை ஞர்களில் ஒருவனுக்கு அவனின் உறவினர்களில் ஒருவர் உற்சாகப்படுத்தினார். அந்த குறிப்பிட்ட இளைஞன் உண்மையிலே, அவன் தன் தந்தையைப் போல பெலசாலியும், திடகாத்திரமுள்ள சரீர வளர்ச்சியுடையவனாக இருந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே அவன் தன் உறவினரின் சொல்லைக் கேட்டு, தன் தந்தை செய்வது போல, மற்றய இளைஞனை அடித்துப் போடுவானாக இருந்தால், அவன் தன் மாம்ச இச்சைக்கு உட்பட்டவனாக இருப்பான். இப்படியாக பல மனிதர்கள், சரீர பெலன், அதிகாரங்கள், சமுக அந்தஸ்துக் கள், கல்வி அறிவு, ஐசுவரியம் போன்ற உலகத்தினால் உண்டான பெரு மைகளினால் தங்கள் நாளாந்த வாழ்க்கையின் போராட்டங்களை ஜெயி க்க முற்படுகின்றார்கள். இது மனிதனுடைய பூரண வளர்ச்சி அல்ல. இவை இந்த உலகத்தினால் உண்டானவைகள். மீட்பராகிய இயேசுவை கைது செய்யும்படியாக, யூத மத அதிகாரிகள் வந்தபோது, அவருடைய சீஷர்களில் ஒருவன், தன்னிடமாய் ஒளித்து வைத்திருந்த வாளை எடுத்து, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட் டினான். அப்பொழுது இயேசு: அவனுடைய காதைத் தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். பின்பு தன் சீஷனை நோக்கி: நான் இப் பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறை வேறும் என்றார். அவர் தேவனுடைய குமாரனாக இருந்த போதிலும், தம்மை பிடிக்க வந்தவர்களை அழித்துப் போடவில்லை. மாறாக, தம்முடைய பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தம் தன் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்று மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தி, பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். இவ்வண்ணமாகவே பிதாவா கிய தேவனுடைய திருச்சித்தத்தை தன் வாழ்வில் நிவைவேற்றி முடிப்பதே ஒரு தேவ மனிதனுடைய பூரணமான வளர்ச்சியாயிருக்கின்றது.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இந்த உலகத்தின் போக்கின்படி நான் என் வாழ்க்கையை வாழாமல், இயேசுவைப் போல உம்முடைய பூரணமான திருச்சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுத்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:3