புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2021)

தந்தையை அறிகின்ற அறிவு

1 கொரிந்தியர் 13:11

நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவி ட்டேன்.


“ஒரு சிறு பிள்ளையானவன், அவனுடைய தகப்பன் காலையிலே வேலை க்குச் சென்றவுடன், எனக்கு அப்பா வேணும் என்று அழுது கொண்டே இருந்தான். மாலையிலே தகப்பன் வந்ததும், அவரை இறுகக் கட்டியணைத்து, என்னைவிட்டு போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். இவ்வண்ணமாக அடுத்த நாளும்; அவன் அழுது கொண்டேயிருந்தான்.ஆனால் நாட்கள் கடந்து சென்று அவன் காரியங்களை அறிந்து கொள்ளும் அறிவை அடை ந்த போது, “என் அப்பா, எங்கள் வாழ்வாதாரத்திற்காக பணம் சம்பாதிக்கும்படி சென்றிருக்கின்றார், மாலையிலே அவர் என்னிடம் வந்து விடுவார்” என்று கூறிக் கொள்வான். அவன் பாலர் பாடசாலைக்கு செல்லும் நாள் வந்த போது, முதல் நாள் பாடசாலை வாசலிலே தன் தாயாரை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். வகுப்பில் தன் தாயாரை தன்னுடன் இருக்கும்படி வேண்டிக் கொண்டான். நாட்கள் கட ந்து சென்று அறிவிலே அவன் வளர்ந்த போது, பாடசாலை முடிந்த பின், என் தாயார் வந்து என்னை கூட்டிக் கொண்டு செல்வார் என்ற உறுதி அவன் மனதிலே உண்டானது. பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே நாமும் கிறிஸ்துவுக்குள் புதியதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல இருக்கின்றோம். ஆரம்பத்திலே சின்னக் காரியங்களைக் கண்டுகூட பயந்து நடுங்கி விடுகின்றோம். தேவன் என்னைக் கைவிட்டாரோ? அவர் என்னை மறந்தாரோ? என் தேவன் எங்கே என்று மனிதிலே எண்ணிக் கொள்வோம். நாட்கள் சென்று தேவனை அறிகின்ற அறிவிலே வளரும் போது, நாம் தேவ பிள்ளைகளாக மாற்ற ப்படுகின்றோம். வாழ்விலே கடும் புயல் போன்ற சாவால்கள் வந்தாலும், பயங்கரங்கள் சூழ்ந்து கொண்டாலும், கஷ்டங்கள் அழுத்தினாலும், என்னுடைய பிதா வாகிய தேவன் எங்களை ஒரு போதும் மறந்து போக மாட்டார். அவர் எங்களை கைவிடமாட்டார் என்னும் நிச்சயத்திலே உறுதியாய் தரித்து நிற்கின்றவர்களாகின்றோம். இப்படியாக நாம் பிதாவாகிய தேவனுக்குப் பிரியமான குமாரர்களும், குமாரத்திகளுமாக எப்போதும் விசுவாசத்திலே உறுதியாய் தரித்திருப்போம்.

ஜெபம்:

சதா காலமும் என்றென்றும் எங்களோடு இருக்கும் தேவனே, மகிமையிலே உம்மோடு சேரும் நாள் வரைக்கும் உம்மைப்பற்றும் விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க பிரகாசமுள்ள மனக்கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-3