புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2021)

புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்

1 கொரிந்தியர் 14:20

சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள். துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.


“குழந்தையைப் போல” கபடமற்ற இருதயமுடையவனாக இரு;ஆனால் “குழந்தைத்தனம்” உடையவனாக இராதே என்று ஒரு வயதான தேவ ஊழியர் ஒரு வாலிபனுக்கு அறிவுரை கூறினார். பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கும்போது, தங்கள் பெற்றோரிடம் இருக்கும் வெளி த்தோற்றம், அவர்களிடமிருக்கும் ஐசுவ ரியம், அவர்களின் சமுக அந்தஸ்து, அவர்களின் கல்வி அறிவைப் பார்த்து அவர்களை பற்றிக் கொள்வதில்லை. மாறாக எந்த நிபந்தனையுமின்றி பெற் றோரை மனதார பற்றிக் கொள்கின்றா ர்கள். பெற்றோரையே நம்பி வாழ்கின் றார்கள். துர்ச்செய்கைளை நடப்பிக்கும் துர்க்குணம் அவர்களிடம் இருக்காது. அவர்கள் உலக அதிகாரங்களை குறி த்த ஆசை அவர்களிடம் இல்லை. அவ ர்களிடத்தில் வேற்றுமைகள் இருப்பதி ல்லை. இவ்வண்ணமாக, சிறு பிள்ளைகளைப் போல நாம் நம்முடைய பிதாவாகிய தேவனை பற்றிக் கொள்ளுவதையே தேவன் விரும்புகி ன்றார். அதே வேளையிலே, குழந்தையானது, எந்த ஒரு காரியத்தை யும் அழுது சாதித்துக் கொள்ளும். காண்பவைகள் எல்லாவற்றையும் தன் கைகளிலே எடுத்து தன் வாய்குள் போட்டுக் கொள்ளும். தான் நினை த்ததை சாதிக்க வேண்டும் என்று அழும். ஊட்டச் சத்துள்ள உணவு களை உண்பதை விரும்புவதில்லை. வீட்டைவிட்டு பாடசாலைக்கு சென்று கற்க விரும்பாது. தன் சூழ்நிலைகளானது மாற்றமடைந்தால் அழுது கொ ண்டே இருக்கும். இவ்வண்ணமாக, ஒரு குழந்தையானது, குழந்தையாக இருக்கும் போது குழந்தைத்தனமுள்ளதாகவே இருக்கும். அதைக் குறி த்து எவரும் தவறாக எண்ணிக் கொள்வதுமில்லை, பேசிக் கொள்வது மில்லை. அதே போல நாம் கிறிஸ்தவர்களாக மறுபடியும் பிறக்கும் போது, புதிதாய் பிறந்த குழந்தையானது, பெற்றோரைப் பற்றிக்கொள் வதைப் போல நாம் நம்முடைய பிதாவாகிய தேவனை பற்றிக் கொள்ள வேண்டும். புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு இருப்பது போல, குழந் தைத்தனமான சில சுபாவங்களும் நம்மிடம் உண்டாயிருக்கலாம். அவை களைவிட்டு நாம் தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருக வேண்டும். குழந்தைகளிடம் துர்க்குணம் இருக்காது, எனவே அதிலே நாம் எப்போதும் குழந்தைகளாகவேயிருந்து, தேவனை அறிகின்ற அறி விலே நாம் வளர்ந்து பெருகின்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தகப்பனே, துர்க்குணத்திலே குழந்தைகளாவும், உம்மை பற்றிக் கொள்ளுவதிலே கபடற்ற இருதயமுள்ள பிள்ளைகளைப் போலும் இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:3