புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2021)

இயேசு இல்லாத வாழ்வு

யோவான் 15:5

ஆண்டவர் இயேசு: என் னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


நான் குடிப்பதில்லை, வெறிப்பதில்லை, புகைப்பதில்லை, தூ~ணமான வார்த்தைகளைப் பேசுவதில்லை, மற்றவனுக்கு கெடுதி செய்வதில்லை. பிறப்பிலும் வளர்ப்பிலும் நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தங்கள் சன்மார்க்கமான வாழ்க்கையை குறித்து சில மனிதர்கள் பெரிமி தமாக பேசுவதுண்டு. இவ்வண்ணமாக ஒரு ஐசுவரியமுள்ள வாலிபன் ஆண்டவராகிய இயேசுவிடனித்தில் வந்து: கொலை, விபசாரம், களவு, பொய்ச்சாட்சி என்னிடத்தில் இல்லை. என் பெறறோரை நான் கனம் பண் ணுகின்றேன். என்னுடைய அயல வனை நேசிக்கின்றேன். இவைகளை எல்லாம் என் சிறுவயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன்;. நித்திய ஜீவ னை பெற்றுக் கொள்ளும்படிக்கு இன்னும்; என்னிடத்தில் குறைவு என்ன என்று கேட்டான். அதற்கு இயேசு: 1. நீ உலக ஐசுவரியத்தின்மேலுள்ள ஆசையை விட்டுவிடு. 2. என்னை பின்பற்றி வா என்று இரண்டு காரியங்களை அவனிடம் கூறினார். ஒருவன் சன்மார்க்கமான வழியிலே வாழ்வது அவன் மனதுக்கு சுயதிருப்தியை கொடுக்கலாம், அதனால் அவன் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியாது. அந்த வாலிபனுக்கோ உலக ஐசுவரியத்தின் பற்றை விட்டுவிட முடியவில்லை. ஆனால் அவன் சன்மார்க்கனாக வாழ்ந்தாலும் தன் வாழ்வில் குறையி ருப்பதை உணர்ந்து கொண்டான். அதுபோலவே இன்று பல மனிதர்கள் இந்த உலகிலே சன்மார்க்கமான வழியிலே வாழ்ந்தாலும், இந்த உலகத் திற்குரிய ஏதோ ஒரு காரியம் அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டி ருக்கின்றது. அது மாம்சத்தின் இச்சையாகவோ, கண்களின் இச்சை யாகவோ அல்லது ஜீவனத்தின் பெருமையாகவோ இருக்கலாம். வேறு சிலர் உலக ஆசைகளை துறந்து துறவிகளாக வாழ தங்கள் சொந்த பெலத்தினால் முயற்ச்சிக்கின்றார்கள். அதனால் நித்திய ஜீவனுக்குரிய வழியை கண்டடையலாம் என்று பிரயாசப்படுகின்றார்கள். ஆனால் ஒருவன் இயேசுவை பின்பற்ற மனதில்லாதவனாக இருப்பான் என்றால், அவன் பிதாவாகிய தேவனிடத்திற்கு வர முடியாது, இயேசு கிறிஸ்து வின் நாமமேயல்லாமல் பரலோக சுதந்திரமாகிய நித்திய ஜீவனை பெற் றுக் கொள்ள முடியாதென்பதை உணர முடியாமல் அவர்கள் மனக் கண்கள் இருளடைந்திருக்கின்றது. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று இயேசு கூறியிருக்கின்றார். எனவே நாம் அவரைப் பின்பற்றி வாழும் போது, இந்த உலக ஆசைகளை துறந்து, நித்திய ஜீவனை நாம் பெற் றுக் கொள்ளலாம்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, பரலோகம் வந்தடைவதற்கு நீர் அமைத்திருக்கும் ஒரே வழியாகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றி, அவர் காட்டிய வழியிலே வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:13-16