தியானம் (வைகாசி 02, 2021)
தேவனுடைய வீட்டார்
எபிரெயர் 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன் புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்
ஒரு கிராமத்தில் வசித்து வந்த அதிகாரியொருவன் அந்த கிராமத்தில் சட்ட திட்டங்களை அமுலாக்கும் நிர்வாகக்குழுவில் முக்கிய அங்கத்த வனாக இருந்தான். ஒரு நாள் அவனுடைய பிள்ளைகளிலொருவன், அயலிலுள்ள மனிதனொருவனுக்கு அநீதியான செயலொன்றை செய்து விட்;டான். அநீதி செய்தவன் அதிகா ரியின் மகனாக இருந்ததால் அவன் செய்த செயலைக் குறித்து எவரும் பேசத் துணியவில்லை. அதிகாரியா கிய அவன், தன் மகன் செய்த குற் றத்தை அறிந்திருந்தபோதும், அறியா தவனைப் போல பாராமுகமாகவிட்டு விட்டான். இப்படிப்பட்ட செயல்கள் இந்த உலகத்திலே சாத்தியமாக இருக்கலாம். ஆனால் நாம் தேவனு டைய வீட்டாராக இருக்கின்றோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். நாம் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவி காரத்தின் ஆவியைப் பெற்றிருக்கின்றோம். சர்வ வல்லமையுள்ள தேவனே எங்கள் வீட்டிற்கு அதிகாரியாக இருக்கின்றார். நீதியும் நியா யமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்;;கிருபையும் சத்தியமும் அவருக்கு முன்பாக நடக்கும். அவர் தன்னுடைய வீட்டைச் சேர்ந்த வர்களாகிய நம்மை சுத்தம் செய்கின்றார். ஆண்டவராகிய இயேசு சொன்னார்: நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்து அதிக கனிகளைக் கொடுக்கும்படி, நம்மை சுத்தம்பண்ணுகிறார். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே தொடங்கு ங்காலமாயிருக்கிறதால், நாம் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இரு ப்போமாக. கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்த நம்மை தம்மு டைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக மாற்றியிருக்கின்றார். கீழ்ப்படியா மையின் பிள்ளைகள் மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு நாம் பிரியமான பிள்ளைகளைப்போல நம்முடைய பிதாவாகிய தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
உன்னதமான தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை உமக்கென்று வேறுபிரித்திருக்கின்றீர். அந்த மேன்மையை உணர்ந்தவனா(ளா)க, உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளையாக வாழ கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:6