புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2021)

ஆவிக்கேற்ற மாளிகை

1 பேதுரு 2:5

ஜீவனுள்ள கற்களைப் போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.


ஒரு மனிதனானவன், இரண்டு தட்டுக்களையுடைய அழகான மாளிகை யொன்றை கட்டினான். அந்த வழியாய் போகின்றவர்கள் நின்று பிரமி க்கத்தக்கதாக அது மிகவும் கவர்ச்சியுள்ளதாக இருந்தது. அந்த மாளி கையானது நவீன உபகரணங்களையும், சகல வசதிகளையுமுடைய தாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகையின் கட்டுமானப் பணி கள் யாவும் முற்றாக முடிவடைந்த பின்னர், அந்த மாளிகையின் சொந்த க்காரன், அந்த மாளிகையின் அமை ப்பை பரிசோதிப்பதற்காக தேர்;ச்சி பெற்ற கட்டிட நிபுணர்களை அழைப் பித்தான். நிபுணர்களின் அறிக்கை யின்படி, அந்த மாளிகையானது, சிற ந்த முறையிலே வடிவமைக்கப்பட்ட போதிலும், அதன் அஸ்திபாரத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதினால் வருங்காலங்களிலே அதை பரிபாலனம் செய்ய பெரும் செலவு களும் நஷ்டங்களும் ஏற்படலாம் என்று தெரிவித்தார்கள். பாருங்கள் ஒரு அழகானதும் சகல வசதிகள் நிறைந்ததுமான அந்த மாளிகையின் அஸ்திபாரம் ஸ்திரமாக போடப்படவில்லை. அஸ்திபாரமானது உறுதி யாய் நிலைத்திருக்காவிட்டால், அதன்மேல் விலையேறப்பட்ட வஸ்த்துகளைப் போட்டு, கோடிக் கணக்காக பணத்தை செலவழித்து கட்டினா லும் அது அநேக காலத்திற்கு நிலைத்திருக்கப் போவதில்லை. பிரிய மானவர்களே, உங்கள் வாழ்க்கையின் அஸ்திபாரம் எங்கே போடப்பட் டிருக்கின்றது? ஜீவனுள்ள நம்பிக்கையாகிய கிறிஸ்து மூலமாய் ஸ்திர ப்படிருக்கின்றதா? உங்கள் வாழ்க்கையிலே உண்டாகும் புயல் போன்ற அனுபவங்களும், அக்கினி போன்ற சோதனைகளும் அதை உறுதிப்படு த்தும். நம்முடைய வாழ்க்கையின் அஸ்திபாரமானது, விலையேறப்பெ ற்றதுமாயிருக்கிற, ஜீவனுள்ள கல்லாகிய ஆண்டவராகிய இயேசுவின் மேல் ஸ்திரப்பட்டிருக்க வேண்டும். அந்த உறுதியான கன்மலையின் மேல், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாக இயே சுகிறிஸ்து மூலமாய் நாம் கட்டப்பட வேண்டும். வாழ்க்கையில் உண் டாகும் அக்கினி, புயல் போன்ற அனுபவங்கள், அந்த ஆவிக்குரிய மாளிகையை பரிசோதிக்கும்போது இயேசு கிறிஸ்துவின்மேல் உறு தியாய் நிலைத்திருப்பவன் என்றென்றும் அசைக்கப்படுவதில்லை.

ஜெபம்:

அன்பின் பிதவாகிய தேவனே, வாழ்வில் ஏற்படும் மலை போன்ற சோதனைகளையும், புயல் போன்ற அனுபவங்களையும் மேற்கொள்ளும்படி கிறிஸ்துவின்மேல் நிலைகொண்டவர்களாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1