புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2021)

இளைப்படையாமல் முன்னேறுவோம்

வெளிப்படுத்தல் 2:7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்


ஒரு ஸ்தாபனத்திலே இரண்டு மனிதர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவன் மேற்பார்வையாளராகவும், மற்றவன் ஒரு சாதாரண தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்கள். அவர்களில் மேற்பார்வையாளராக இருந்த மனிதன் தன் வேலையிலே அசதியுள்ளவனாக இருந்தான். அவன் தன் கடமைகளை நேர்த்தியாக நேரத்திற்கு செய்து முடிப்பதில்லை. ஆனால், சாதாரண தொழிலாளியாக இருந்த மனிதன், தன் மேற்பார்வையாளரின் அசதியை நன்கு அறிந்திருந்த போதிலும், தன் கடமை யிலே கண்ணும் கருத்துமாக இருந்து வந்தான். சில நாட்களிலே அவனுடைய மேற்பார்வையாளர் அவனுக்கு தன்னு டைய வேலைகளையும் கொடுத்து விடுவான். வேலை பழு மிகவும் அதிகமாக இருந்த போதும், அவன் முறுமுறுக்காமல் பொறுமையுடன் அவைகளை செய்து வந்தான். ஆண் டுகள் கடந்து சென்ற போது, குறித்த நாளிலே அந்த மேற்பார்வை யாளரின் வேஷம் களைந்து போனது. அந்த ஸ்தாபனத்தின் இயக்குனர், அந்த மேற்பார்வையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்தார். அந்த சாதாரண தொழிலாளியைப் பாராட்டி அவனுக்கு பதவியுயர்வைப் கொடுத்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த அநீதியான மேற்பார்வையாளரின் வேஷம் ஒரு நாள் அந்த இயக்குனருக்கும் அங்கு வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் வெளிப்பட்டது. ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு மறைவான காரியங்கள் ஒன்றுமே இல்லை. ஆண்டவராகிய இயேசு சபைகளுக்கு செய்தி அனுப்பிய போது, எபேசு என்னும் சபையை நோக்கி: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய் யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்” என்று அவர்களுக்கு கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பிற்கு திரும்பு என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார். எனவே ஒருவேளை நம்மைச் சூழ இருப்பவர்கள் தவறிப்போனாலும் நாம் தவறிப்போகாமல், பொறுமையோடே, இளைப்படையாமல் பிரயாசப்படுவோம். தேவ அன் பிலே நிலைத்திருப்போம். பரலோகில் கைமாறு மிகுதியாக கிடைக்கும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, எங்களை சூழ உள்ளவர்களின் குறைவுகளைக் கண்டு நான் முறுமுறுத்து பின்வாங்கிப் போகாமல் நீர் தந்த பொறுப்பை நிறைவேற்றி முடிக்க கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 21:19-21